/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'அதிகாரி, ஆட்சியாளர் சொந்த செலவில் புதிய தடுப்பணை கட்ட வேண்டும்'
/
'அதிகாரி, ஆட்சியாளர் சொந்த செலவில் புதிய தடுப்பணை கட்ட வேண்டும்'
'அதிகாரி, ஆட்சியாளர் சொந்த செலவில் புதிய தடுப்பணை கட்ட வேண்டும்'
'அதிகாரி, ஆட்சியாளர் சொந்த செலவில் புதிய தடுப்பணை கட்ட வேண்டும்'
ADDED : ஆக 04, 2024 11:27 PM
பல்லடம் : கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
திருச்சி, கொள்ளிடம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே, 6.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்பணை திறப்பு விழா செய்யப்பட்ட சில மாதங்களிலேயே, நீரோட்டத்துக்கு தாக்கு பிடிக்காமல் கரைந்து போன அவலம் நடந்துள்ளது. தடுப்பணையின் தரம் எந்த அளவு இருந்துள்ளது என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. தரமின்றி மேற்கொள்ளப்படும் இது போன்ற பணிகளால், ஒவ்வொரு முறையும் மக்களின் வரிப்பணம் தான் வீணடிக்கப்படுகிறது. இதற்கு யார் பொறுப்பேற்பது? தடுப்பணைக்கான மொத்த செலவையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள்தான் ஏற்றுக்கொண்டு, புதிதாக தடுப்பணை கட்ட வேண்டும்.