/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திறந்த இரண்டே நாளில் மூடப்பட்ட 'ஒரு நிலையம் - ஒரு தயாரிப்பு' கடை
/
திறந்த இரண்டே நாளில் மூடப்பட்ட 'ஒரு நிலையம் - ஒரு தயாரிப்பு' கடை
திறந்த இரண்டே நாளில் மூடப்பட்ட 'ஒரு நிலையம் - ஒரு தயாரிப்பு' கடை
திறந்த இரண்டே நாளில் மூடப்பட்ட 'ஒரு நிலையம் - ஒரு தயாரிப்பு' கடை
ADDED : மார் 21, 2024 08:47 AM
- நமது நிருபர் -
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் திறக்கப்பட்ட 'ஒரு நிலையம் - ஒரு தயாரிப்பு' விற்பனை நிலையம் இரண்டு நாளில் மூடப்பட்டது.
உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கும் வகையில், 'ஒரு நிலையம் - ஒரு தயாரிப்பு' என்ற திட்டம் ரயில்வே வாயிலாக துவங்கப்பட்டது.
தெற்கு ரயில்வேயில், 483 ஸ்டேஷன்களில் அந்த ஊரின் பிரபலமான பொருட்களை விற்க அரங்குகள் அமைக்கப்பட்டது. ஒரு வாரம் முன் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இத்திட்டத்தின் கீழ் விற்பனையகம் திறக்கப்பட்டது.
சிறுதானிய பொருட்கள் விற்பனை துவங்கியது. ராகி தோசை மிக்ஸ், சிறுதானிய முருங்கை கீரை தோசை மிக்ஸ், பொங்கல் மிக்ஸ், முருங்கை இலை சூப், கொள்ளு, ஆவாரம்பூ சூப், நாவல் சூப் பொடி உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. பலரும் அறிந்து, பிளாட்பார்மில் கடையை தேடுகின்றனர். ஆனால், கடை மூடப்பட்டுள்ளது.
கடந்த, 13ம் தேதி துவங்கப்பட்ட கடை, இரண்டு நாட்கள் செயல்பட்டது. அதன் பின், செயல்படவில்லை. ரயில் பயணியரிடம் எத்தகைய வரவேற்பு என்பதை அறியும் முன்பே கடை மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

