/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை மறந்த கட்சிகள்? விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
/
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை மறந்த கட்சிகள்? விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை மறந்த கட்சிகள்? விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை மறந்த கட்சிகள்? விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
ADDED : மார் 31, 2024 12:29 AM
பல்லடம்;விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான, ஆனைமலையாறு - -நல்லாறு திட்டத்தை அனைத்து கட்சிகளும் மறந்து விட்டதாக, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
அதன் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே, விவசாயிகளின் பிரதான கோரிக்கைகள் அடங்கிய பட்டியல், அனைத்துக் கட்சி நிர்வாகிகளிடமும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆனைமலையாறு - நல்லாறு திட்டம், விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாகும்.
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும் இத்திட்டத்தை, எந்த அரசியல் கட்சிகளும் தேர்தல் வாக்குறுதியில் கொண்டு வரவில்லை.
இதேபோல், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டி, ரேஷன் கடைகளில் பாமாயிலை தவிர்த்து, தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதையும் அரசியல் கட்சிகள் பொருட்படுத்தவில்லை. பிரதமர் வேட்பாளரே யார் என்று தெரியாமலும்,
தாங்களே பிரதமர் என்ற எண்ணத்திலும், இரு திராவிட கட்சிகளும் இஷ்டத்துக்கு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளன.
ஆனால், விவசாயிகளின் கோரிக்கையை பெயரளவுக்கு கூட கொண்டு வரவில்லை. பல்லடம் வந்த பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை மட்டும், ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் குறித்தும், ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிப்பது தொடர்பாகவும் உறுதி அளித்துள்ளார்.
அனைத்துக் கட்சிகளும் விவசாயிகளின் கோரிக்கையை தவிர்த்த நிலையில், அண்ணாமலையின் வாக்குறுதி ஆறுதல் அளிக்கிறது. பா.ஜ., ஆட்சி அமையும் பட்சத்தில், விவசாயிகளின் கோரிக்கையை அண்ணாமலை நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு, ஈஸ்வரன் கூறினார்.

