/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமத்திற்குள் புகுந்த குரங்கு: அச்சத்தில் ஜல்லிபட்டி மக்கள்
/
கிராமத்திற்குள் புகுந்த குரங்கு: அச்சத்தில் ஜல்லிபட்டி மக்கள்
கிராமத்திற்குள் புகுந்த குரங்கு: அச்சத்தில் ஜல்லிபட்டி மக்கள்
கிராமத்திற்குள் புகுந்த குரங்கு: அச்சத்தில் ஜல்லிபட்டி மக்கள்
ADDED : ஜூன் 21, 2024 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:உடுமலை அருகேயுள்ள ஜல்லிபட்டியில், குரங்கு 'சேட்டை' காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
உடுமலை அருகேயுள்ள ஜல்லிபட்டி நால்ரோடு பகுதியில், வனப்பகுதியிலிருந்து வழி தவறி வந்த, மந்தி எனப்படும் குரங்கு ஒன்று, சுற்றி வருகிறது.
கிராமத்திற்குள் புகுந்து வீடுகளிலுள்ள பொருட்களை எடுத்துக்கொள்வதோடு, தென்னந்தோப்புகள், காய்கறிகளையும் சேதப்படுத்தி வருகிறது.
மேலும், வழியில் செல்லும் மக்களையும் மிரட்டி வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இக்குரங்கை வனத்துறையினர் பிடித்து, வனப்பகுதிக்குள் மீண்டும் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.