/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊர் பெயர் இல்லாத பலகை ;தெக்கலுார் மக்கள் அதிர்ச்சி
/
ஊர் பெயர் இல்லாத பலகை ;தெக்கலுார் மக்கள் அதிர்ச்சி
ஊர் பெயர் இல்லாத பலகை ;தெக்கலுார் மக்கள் அதிர்ச்சி
ஊர் பெயர் இல்லாத பலகை ;தெக்கலுார் மக்கள் அதிர்ச்சி
ADDED : மே 29, 2024 12:27 AM

அவிநாசி;பெயர் பலகையில் ஊர் பெயர் இல்லாததால், ஊர் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
அவிநாசி - கோவை நெடுஞ்சாலை இடையே, தெக்கலுார் உள்ளது. பை பாஸ் சாலையில் பயணிக்கும் பயணிகள், சர்வீஸ் ரோட்டுக்கு மாறினால் தான், தெக்கலுார் செல்ல முடியும். ஆனால், 'பை பாஸ் ரோட்டோரம் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் ஊர் பெயர் இல்லை' என, தெக்கலுார் மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தெக்கலுார் பகுதி மக்கள் கூறியதாவது:
ரோட்டோரம் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில், 'தெக்கலுார்' என குறிப்பிடாமல், சூரிபாளையம், புதுப்பாளையம் ஊர் பெயர் மட்டும் எழுதி வைத்துள்ளனர். இதனால், பைபாஸில் இருந்து சர்வீஸ் ரோடுக்கு இறங்காமல் பலரும், ஆட்டையாம்பாளையம் சென்று, மீண்டும் தெக்கலுார் திரும்பி வர வேண்டி யிருக்கிறது.
எனவே, 'பெயர் பலகையில் தெக்கலுார் ஊரின் பெயர் எழுத வேண்டும்' என, 'டோல்கேட்' வசூலிக்கும் உரிமையாளர்களிடம் தெரிவித்தும் பலன் இல்லை.
இவ்வாறு, அவர்கள் கூறினார்.