/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போலீஸ் கமிஷனர் அலுவலகம் அடுத்த மாதம் திறப்பு
/
போலீஸ் கமிஷனர் அலுவலகம் அடுத்த மாதம் திறப்பு
ADDED : ஏப் 28, 2024 01:40 AM

திருப்பூர்:திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால், அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது.
திருப்பூர், அவிநாசி ரோடு, குமார் நகர் - அங்கேரிபாளையம் ரோடு சந்திப்பில் பழைய ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலக கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. புதிய கமிஷனர் அலுவலக கட்ட, 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
கடந்த, 2021 டிசம்பரில், 2.24 ஏக்கரில் கமிஷனர் அலுவலக கட்டுமான பணி துவங்கியது. ஐந்து மாடி தளத்துடன் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. தற்போது கமிஷனர் அலுவலகத்தில், 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. இன்னமும் ஒவ்வொரு அறைகளுக்கும் மின் இணைப்பு, அலுவலக சுற்று சுவர் உள்ளிட்ட சில பணிகளே நிலுவையில் இருந்து வருகிறது. இப்பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு பின் (ஜூன் 4) புதிய போலீஸ் கமிஷனர் அலுவலகம் திறக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.

