/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலையும் அமைக்கலே... தெரு விளக்கும் இல்லே!
/
சாலையும் அமைக்கலே... தெரு விளக்கும் இல்லே!
ADDED : மே 31, 2024 11:56 PM

திருப்பூர்;திருப்பூர் நொய்யல் ஆற்றின் வடக்கு பகுதியில், கருமாரம்பாளையம் உள்ளது. ஊத்துக்குளி ரோட்டைச் சென்று சேரும் வகையில், நொய்யல் ஆற்றின் வடக்கு கரை பகுதியிலிருந்து கருப்பராயன் கோவில் வழியாக ஒரு ரோடு உள்ளது. ஆயிரக்கணக்கானோர் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.
அப்பகுதியில், ஏராளமான வீடுகளும் சிறு தொழில் நிறுவனங்களும் உள்ளன. இப்பகுதியினர் இந்த ரோடு வழியாகத்தான் ஊத்துக்குளி ரோட்டைச் சென்று சேர வேண்டும். இப்பகுதியில் அணைக்காடு பகுதியிலிருந்து செல்லும் வாய்க்காலும், சற்று தள்ளி அதனருகே கழிவுநீர் வடிகாலும் அமைந்துள்ளது.
மிகவும் தாழ்வான பகுதியாக உள்ளதால் மழை நாட்களில் இந்த ரோட்டில் மழை நீர் தேங்கி ரோடு சேதமடைந்து காணப்படுகிறது.
மேலும், குழாய் பதிப்பு பணிகள் மேற்கொண்டதால் இந்த ரோடு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.
மெட்டல் மற்றும் தார் ரோடு என்பதே இல்லாமல் சேறும் சகதியுமாக மாறிக் காட்சியளிக்கிறது. மேலும் இப்பகுதியில் தெரு விளக்குகளும் இல்லாத நிலை காணப்படுகிறது.
தினமும் ஏராளமானோர் பயன்படுத்தும் இந்த ரோட்டை சீரமைத்து தார் ரோடு போட்டும்,தெரு விளக்குகள் அமைத் தும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

