/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
' விதை ' உறங்காது; ' கவிதை 'யாக கொட்டும்
/
' விதை ' உறங்காது; ' கவிதை 'யாக கொட்டும்
ADDED : ஆக 25, 2024 12:49 AM

ஓட்டுச்சாவடியில் மேலாடையின்றி உறங்குகிறான் சுவரொட்டி ஒட்டியவன்
கொசுவின் ரீங்காரம்அவசரத்தில்அறைகிறேன்என்னை நானே...
இப்படியாக அணிவகுக்கிறது நுாற்றுக்கணக்கான 'ைஹக்கூ' கவிதைகள். 'தாய்த்தமிழ் பட்டிமன்றக்குழு' நிறுவனர் மீன்கொடி பாண்டியராஜ், 28 இந்த கவிதைகளுக்குச் சொந்தக்காரர். 'அடர்வனத்தில் முதல் விதை' என்ற ஹைக்கூ கவிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டிருக்கிறார்.
நெருப்பெரிச்சல் திருமுருகன் மெட்ரிக்., பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் உள்ளிட்ட இலக்கிய ஆர்வலர்கள் நிறைந்த அரங்கில் புத்தகம் வெளியிட்டார்.
''என் பெயருக்கு ஏற்ற அடைமொழி தேவையென்பதால், மீன்கொடி என்ற அடைமொழியை இணைத்துக் கொண்டேன். பள்ளியில் படிக்கும் போதே, பேச்சு, எழுத்தின் மீது ஆர்வம்'' என்ற அறிமுகத்துடன் தொடர்ந்தார்.
''கல்லுாரியில் படிக்கும் போது, ைஹக்கூ கவிதை குறித்த ஒரு பாடம் இருந்தது; வெறும், 3 வரி கவிதைக்கு, ஒரு மணி நேரம் விளக்கமளித்தார், உதவி பேராசிரியர் பிரகாஷ். அவர் அளித்த விளக்கத்தில், மூன்று வரிக்குள் இத்தனை தகவல்களா என வியந்து போனேன்.
''அதன் பின்பே ைஹக்கூ கவிதை எழுது வதில் ஆர்வம் ஏற்பட்டது. அந்த ஆசிரியர் துாவிய விதைதான், ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு என்னை வளர்த்து விட்டிருக்கிறது.
டாக்டர் எஸ்.என்.எஸ். ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லுாரி (தன்னாட்சி) பாடப்பகுதியில், என் ைஹக்கூ கவிதையையும் அவர் இடம் பெறச் செய்து, என் திறமைக்கு ஒரு அங்கீகாரம் வழங்கினார்.
''நிகழ்கால சம்பவங்கள், சுற்றுச்சூழல், இயற்கை சார்ந்த விஷயங்கள், அதன் மீது சமூகத்தின் பார்வை போன்ற விஷயங்கள், விமர்சனங்களை என் கவிதைகள் அதிகம் தாங்கியிருக்கும்.
''பேச்சுக் கலையை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கில் தான், 'தாய்த்தமிழ் பட்டிமன்றக்குழு' என்ற அமைப்பை நிறுவினேன்; எங்கள் முயற்சியால் புதிது புதிதாக பேச்சாளர்கள் உருவாகி வருகின்றனர்'' என்று தனது இலக்கிய பயணம் குறித்து இலகுவாக விவரித்தார், பாண்டியராஜ்.
ஆம். விதை உறங்காது; 'கவிதை'யாகக் கொட்டும்.
''கல்லுாரியில் படிக்கும் போது, ைஹக்கூ கவிதை குறித்த ஒரு பாடம் இருந்தது; வெறும், 3 வரி கவிதைக்கு, ஒரு மணி நேரம் விளக்கமளித்தார், உதவி பேராசிரியர் பிரகாஷ். அவர் அளித்த விளக்கத்தில், மூன்று வரிக்குள் இத்தனை தகவல்களா என வியந்து போனேன்''

