/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய விளையாட்டுத் திருவிழா துவங்கியது
/
குறுமைய விளையாட்டுத் திருவிழா துவங்கியது
ADDED : ஆக 12, 2024 11:42 PM
திருப்பூர்;முதல் பருவத்தேர்வுகள் முடிந்ததையடுத்து, குறுமைய விளையாட்டு போட்டிகள், மாவட்டம் முழுதும் நேற்று துவங்கியது. ஆர்வமுடன் மாணவ, மாணவியர் விளையாட்டு போட்டிகளில் களமிறங்கினர்.
திருப்பூர் வடக்கு குறுமைய போட்டி, சிறுபூலுவப்பட்டி, ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளிச் செயலாளர் கீர்த்திகாவாணிசதீஷ், பள்ளி முதல்வர் மணி மலர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.
இதில், 14 வயது மாணவியர் இரட்டையர் பிரிவில், ஸ்ரீ சாய் மெட்ரிக் கனிஷ்கா, யோகவி, 17 வயது பிரிவில், கொங்கு வேளாளர் மெட்ரிக் தக் ஷிதா, நக் ஷத்ரா ரித்திகா, 19 வயது பிரிவில், ஸ்ரீ சாய் மெட்ரிக் பள்ளி சன்மதி, மேகாஸ்ரீ, தனிநபர் பிரிவு, 14 வயது பிரிவில் கொங்கு வேளாளர் மெட்ரிக் அனுகிரஹா, 17 வயது பிரிவில் இப்பள்ளி மாணவி, தக் ஷிதா, 19 வயது பிரிவில், ஸ்ரீ சாய் மெட்ரிக் மேகாஸ்ரீ முதலிடம் பெற்றனர்.
தெற்கு குறுமையம்
திருப்பூர் தெற்கு குறுமைய மாணவர் கோ-கோ போட்டி, பிரன்ட்லைன் அகாடமி பள்ளியில் நேற்று துவங்கியது. குறுமைய இணைச் செயலாளர் பாலசுப்பிரமணி வரவேற்றார். பிரன்ட்லைன் பள்ளி இணைச் செயலர் வைஷ்ணவி போட்டிகளை துவக்கி வைத்தார்.
குறுமைய கண்காணிப்புக்குழு உறுப்பினர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். இதில், 14 வயது பிரிவில், 16, பதினேழு வயது பிரிவில், 8, 19 வயது பிரிவில், நான்கு அணிகள் பங்கேற்று விளையாடின. 'நாக்-அவுட்' முறையில் போட்டிகள் நடைபெற்றது. திறமை காட்டி வீரர், அணியினர் அடுத்தச் சுற்று போட்டிக்கு முன்னேறினர்.
திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான மாணவ, மாணவியர் டேபிள் டென்னிஸ் போட்டி, நேற்று நடந்தது. 14 வயது ஒற்றையர் பிரிவில், 7; இரட்டையர் பிரிவில், 8; 17 வயது ஒற்றையர் பிரிவில், 8; இரட்டையர் பிரிவில், 6; 19 வயது ஒற்றையர் பிரிவில், 5; இரட்டையர் பிரிவில் 3 அணிகள் பங்கேற்றன.
அவிநாசி
அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, பச்சாம்பாளையத்தில் உள்ள எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் பள்ளியில், அவிநாசி கல்வி வட்டார அளவிலான குறுமைய விளையாட்டுப் போட்டிகள் நேற்று முதல் துவங்கின. போட்டிகளை, பள்ளி நிர்வாக இயக்குனர் கோவிந்தசாமி, தாளாளர் ராதாமணி, செயலாளர் அனுராகவி, முதல்வர் மீனாட்சி ஆகியோர் துவக்கி வைத்தனர். முதல் நாளில், 14, 17, 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் கேரம், லான் டென்னிஸ், டென்னிகாய்ட் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
---
குறுமைய விளையாட்டுப் போட்டிகள் நேற்று மாவட்டம் முழுவதும் துவங்கின.