sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'ஆறுதலான வார்த்தையே வெற்றி தேடித்தரும்'

/

'ஆறுதலான வார்த்தையே வெற்றி தேடித்தரும்'

'ஆறுதலான வார்த்தையே வெற்றி தேடித்தரும்'

'ஆறுதலான வார்த்தையே வெற்றி தேடித்தரும்'


ADDED : ஆக 18, 2024 11:44 PM

Google News

ADDED : ஆக 18, 2024 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;''தொழில் நடத்துவோர், பணியாளர்களிடம் கூறும் ஆறுதலான வார்த்தையே, வெற்றியை தேடித்தரும்,'' என, எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசினார்.

திருப்பூர் 'டீசா' சார்பில், தொழில்துறை வளர்ச்சிக்கு உழைக்கும் அலுவலர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று, ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவில், 'டீசா' நிறுவன தலைவர் சுரேஷ்பாபு வரவேற்றார்.

எழுத்தாளர் பவா செல்லத்துரை, திரைப்பட இயக்குனர் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். 'சைமா' தலைவர் ஈஸ்வரன், 'நிட்மா' தலைவர் ரத்தினசாமி, 'டெக்பா' தலைவர் ஸ்ரீகாந்த், 'டீமா' தலைவர் முத்துரத்தினம், மாவட்ட நுால் வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் செல்வராஜ், வனத்துக்குள் திருப்பூர் திட்ட இயக்குனர் குமார்துரைசாமி உட்பட, தொழில் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஏற்றுமதி நிறுவன அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கும், தொழில்நுட்ப பணியாளர்களை பாராட்டி, தொழில் அமைப்பு நிர்வாகிகள் விருது வழங்கி கவுரவித்தனர். இயக்குனர் குமார் எழுதிய, 'காலமே போதி மரம்' என்ற நுால் நேற்று வெளியிடப்பட்டது. முன்னதாக, பரதநாட்டியம், தப்பாட்டம், கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசுகையில்,'' மெஷின்கள் வாழ்க்கை முழுவதும் நம்மை வழிநடத்தி விடாது; தொழில்நுட்பமும், விஞ்ஞானமும் கடைசி வரை உடனிருக்காது. மெஷின்களை போல் நடத்தாமல், அனைவரையும் மனிதநேயத்துடன் நடத்த வேண்டும்.

தொழில் நடத்துவோர், அலுவலர் மற்றும் பணியாளர்களிடம் கூறும் ஆறுதலான வார்த்தையே, வெற்றியை தேடித்தரும். ஆதரவான வார்த்தையால் யாருக்கும் நஷ்டம் இல்லை; லாபம் உறுதியாக கிடைக்கும்,'' என்றார்.

---

பழைய மின் கம்பம் அகற்றாததால் சிக்கல்

திருப்பூர்:

பல்லடம், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், பொள்ளாச்சி மற்றும் அவிநாசி செல்லும் நெடுஞ்சாலைகள் இணையும் நால்ரோடு சிக்னல், வாகன போக்குவரத்து நிறைந்த பகுதி. பொள்ளாச்சி ரோட்டில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் திரும்பும் வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்பட்டு வந்ததால், குறுகலாக இருந்த பாலம் அகற்றப்பட்டு, புதிய தரைமட்ட பாலம் கூடுதல் அகலத்துடன் கட்டப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையுடன் பொள்ளாச்சி ரோடு சந்திக்கும் இடத்தில் இருந்த பழைய மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் பொருத்தப்பட்டது. இப்பணிகள் முடிந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியும், பழைய மின்கம்பம் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

----

சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்

திருப்பூர், ஆக. 19-

திருப்பூரில் நேற்று மாலை பெய்த மழையால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

திருப்பூரில் சில நாட்களாக, அவ்வப்போது திடீர் மழை பெய்துவ ருகிறது. நேற்று காலை முதல் மதியம் வரை, வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலை, 4:28 மணிக்கு, சடசடவென மழை பெய்யத்துவங்கியது. 5:00 மணி வரையிலான அரை மணி நேரத்துக்கு, பலத்த மழை பெய்தது.

திடீரென பெய்த மழையால், வாகன ஓட்டிகள் ஆங்காங்கே ரோட்டோர கடைகளில் தஞ்சமடைந்தனர். ஈஸ்வரன் கோவில் வீதி, கே.எஸ்.சி., பள்ளி வீதி, சக்தி தியேட்டர் பகுதிகளில், ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த 11ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை, 6:00 மணி முதல் மழை பெய்தது. வார விடுமுறைநாளான நேற்றும் மாலை நேரம் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இரண்டு வாரங்களாக சண்டே ஷாப்பிங் முடங்கியதால், வர்த்தகர்கள் முகம்வாடினர்.

திருப்பூர் புதுமார்க்கெட் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. சிறிய மழை பெய்தாலும்கூட, மழை நீர் பெருக்கெடுத்து, அருகிலுள்ள கடைகளுக்குள் சென்றுவிடுகிறது.

நேற்று சாக்கடை கழிவுநீர் பொங்கி, அப்பகுதியில் உள்ள நகைக்கடை, ஜவுளி கடைகளுக்கு புகுந்து, பாதிப்பை ஏற்படுத்தியது.

ஒரு சில பகுதிகளில் தாழ்வாக உள்ள வீடுகளில் கழிவு நீருடன் கலந்து மழை நீரும் புகுந்தது.இதனால் தாழ்வான பகுதியில் இருந்த வீடுகளில் வசிப்போர் பெரும் அவதிக்குள்ளாகினர். கோம்பைத் தோட்டம், ராஜீவ் நகர் பிரதான வீதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீரும் கழிவு நீரும் கலந்து புகுந்து வெளியேறியது.

சில வீடுகளில் உட்புறம் தேங்கியும் நின்றது.மழை நின்ற பின் அவற்றை வாரியிறைத்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மழையின் போது, ரோடுகளில் பெருக்கெடுத்த மழை நீர், ரோட்டோர வடிகால்களில் சென்று பாய்ந்தது. வடிகால்களில் கழிவுகள் தேங்கிய சில பகுதிகளில் இது தொடர்ந்து செல்ல முடியாமல் கழிவு நீருடன் கலந்து ரோட்டில் சென்று பாய்ந்தது. இதில் ஒரு சில பகுதிகளில் தாழ்வாக உள்ள வீடுகளில் கழிவு நீருடன் கலந்து மழை நீரும் புகுந்தது.இதனால் தாழ்வான பகுதியில் இருந்த வீடுகளில் வசிப்போர் பெரும் அவதிக்குள்ளாகினர். கோம்பைத் தோட்டம், ராஜீவ் நகர் பிரதான வீதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீரும் கழிவு நீரும் கலந்து புகுந்து வெளியேறியது. சில வீடுகளில் உட்புறம் தேங்கியும் நின்றது. மழை நின்ற பின் அவற்றை வாரியிறைத்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

---------

விநாயகர் சதுர்த்தி விழா

பாதுகாப்பு குறித்து ஆலோசனை

திருப்பூர், ஆக. 19-

வரும், செப்., 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா.

ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி சில மாதங்களாக, திருப்பூரில், இரண்டு இடங்களில் மும்முரமாக நடந்து வந்தது. சிலைகள் தயாராகியுள்ளன. இம்மாத இறுதியில் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்ப ஏற்பாடுகள் நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் சிலைகள் நிறுவப்பட உள்ளது. மாநகரில், ஆயிரம் சிலைகளை வைக்க திட்டமிட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி தொடர்பான ஆலோசனை கூட்டம் திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி தலைமையில் நடந்தது. சிலை பிரதிஷ்டை செய்வதற்கு முன்பு, அதன் பின்பு மற்றும் ஊர்வலம் ஆகிய காலகட்டத்தில் போலீசார் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தினார். பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

சிலை வைக்கும் இடம், பிரதிஷ்டை ஆகியவற்றை டி.ஜி.பி., யின் வழிகாட்டுதலை போலீசார் முறையாக பின்பற்றி அனுமதி அளிக்க வேண்டும். அந்தந்த சரக பகுதியில் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் ஹிந்து அமைப்புகளை அழைத்து கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

---

'மூன்று முதல்வர்களால் நிறைவேறிய திட்டம்'

பல்லடம், ஆக. 19--

'மூன்று முதல்வர்களால் நிறைவேறிய திட்டம்' என, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதன் நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர காரணமாக இருந்த அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்ட குழு கூட்டமைப்பு மற்றும் களம் கண்ட அனைத்து போராளிகளுக்கும், விவசாயிகளுக்கும், பல்வேறு அமைப்புகளுக்கும், ஆதரவு கொடுத்த அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்திட்டத்தை செயல்படுத்த கோரி, மூன்று தலைமுறைகளாக, பல்வேறு வடிவங்களில், பல்வேறு காலகட்டங்களில் தொடர்ச்சியான போராட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

இளைஞர்கள் முதல் முதியோர் வரை அனைவரும் பங்கேற்ற கடும் போராட்டம் காரணமாக, இத்திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றும் என உறுதியளித்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, நிதி ஒதுக்கிய பழனிசாமி, திட்டத்தை துவக்கி வைத்த ஸ்டாலின் என, மூன்று முதல்வர்களால் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இத்திட்டத்தில் பணியாற்றிய அனைத்து பொறியாளர்களுக்கும், பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

---

மாவட்ட தடகளம்: வாகை சூடியவர்கள்

திருப்பூர், ஆக. 19-

திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், ஆறாவது மாவட்ட ஜூனியர் தடகள போட்டி, அணைப்புதுார், டீ பப்ளிக் பள்ளியில் நேற்று நடந்தது. 14, 16, 18 மற்றும் 20 வயது ஆகிய நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. டீ பப்ளிக் பள்ளி சேர்மன் 'ஈஸ்ட்மேன்' சந்திரன் துவக்கி வைத்தார். சங்கச் செயலாளர் சண்முகசுந்தரம் வரவேற்றார்.

முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் முன்னிலை வகித்தார். எம்.பி., சுப்பராயன் தேசியக்கொடி ஏற்றினார். மேயர் தினேஷ்குமார், ஏற்றுமதியாளர் சங்க நிறுவனத் தலைவர் சக்திவேல் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தனர். மாவட்டம் முழுதும் இருந்து, 1,560 வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இணை செயலாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

முதலிடம் பெற்றவர்கள்


மாணவர் பிரிவு

இருபது வயது பிரிவு, 5000 மீ., ஓட்டத்தில், கிருஷ்ணன், நீளம் தாண்டுதலில் மனோஜ்குமார், மும்முனை தாண்டுதலில் பிரியன்சுகராஜ், ஈட்டி எறிதலில் ராகுல், குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் இரண்டிலும் சிவரத்தினம், உயரம் தாண்டுதலில் வித்தியபிரியன், 400மீ., ஓட்டத்தில் கோகுல் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

பதினெட்டு வயது பிரிவு, 1000மீ., ஓட்டம், பிரபாகரன், 100மீ., தடை தாண்டும் ஓட்டம், கேவின்சஞ்சீவ். 16 வயது பிரிவு, 80மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் ஜாய்ரித்திஷ், 600மீ., ஓட்டத்தில் யாதின்.

மாணவியர் பிரிவு

இருபது வயது பிரிவு, குண்டு எறிதலில் தீபா, உயரம் தாண்டுதலில் அபிநயஸ்ரீ, 800மீ., ஓட்டத்தில் நந்தினி, 3000மீ., ஓட்டத்தில், சுதர்ஷினி, நீளம் தாண்டுதல் மற்றும் மும்முனை தாண்டுதல் இரண்டிலும் பவீனா, வட்டு எறிதலில் ஐஸ்வர்யா, 100மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் மகுடேஸ்வரி முதலிடம். பதினெட்டு வயது, 1000மீ., ஓட்டத்தில் பிரியதர்ஷினி, 80மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் பிரேமா, 600மீ., ஓட்டத்தில் வர்ஷிதா ஆகியோர் முதலிடம்.

---

இளம் பேச்சாளர்கள் தேர்வு தி.மு.க., மும்முரம்

திருப்பூர், ஆக. 19-

மாநில அளவில் 100 பேருக்கும் குறையாத இளம் சிறந்த பேச்சாளர்களை தேர்வு செய்ய தி.மு.க., மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி சார்பில், ஒருங்கிணைந்த பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டு இதற்கான தேர்வு நடந்தது. திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த போட்டியில், 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட, கட்சிக் கொள்கையில் பிடிப்பு உள்ளவர்கள் பங்கேற்றனர்.'என் உயிரினும் மேலான' என்ற தலைப்பில் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு பேச்சுப் போட்டியாக இது அறிவிக்கப்பட்டு, பல்வேறு தலைப்புகள் வழங்கப்பட்டிருந்தது. தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட அமைப்பாளர் தங்கராஜ் வரவேற்றார்.

அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்து, பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். மாவட்ட செயலாளர் பத்மநாபன், மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தனர். தாயகம் கவி, செல்வேந்திரன், அன்பழகன், ஆண்டாள் பிரியதர்ஷினி, செந்தில்வேல், மில்டன் ஆகியோர் நடுவர்களாக இருந்து நடத்தினர். 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று பேசினர்.

---

வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு

தாட்கோ தருகிறது வாய்ப்பு

திருப்பூர், ஆக. 19-

கடந்த 2022 - 23, 2023 - 24ம் கல்வியாண்டுகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், தாட்கோ மூலம், எச்.சி.எல்., நிறுவனத்தில், வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

எச்.சி.எல்., டெக்னாலஜியில் ஓராண்டு பயிற்சி அளித்து, நிரந்தர வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது.ராஜஸ்தானில் உள்ள பிட்ஸ்பிலானி கல்லுாரியில், பி.எஸ்.சி., கணினி வடிவமைப்பு; தஞ்சை சாஸ்த்ரா பல்கலையில் பி.சி.ஏ., படிப்பு; அமிட்டி பல்கலையில் பி.சி.ஏ., -பி.பி.ஏ., - பி.காம்., நாக்பூர் ஐ.ஐ.எம்., பல்கலையில் ஒருங்கிணைந்த மேலாண்மை பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம்.

இதில் பயன்பெற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியராக இருக்கவேண்டும். பிளஸ் 2வில், 2022 - 23 கல்வி யாண்டில் 60 சதவீதம்; 2023 - 24ம் கல்வியாண்டில் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

குடும்ப வருமானம் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்கவேண்டும். எச்.சி.எல்., மூலம் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.

ஆரம்ப கால ஊதியமாக மாதம் 17 ஆயிரம் ரூபாய் முதல் 22 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். திறமைக்கு ஏற்ப, பதவி உயர்வு அடிப்படையில் மாத ஊதியம் உயர்த்தப்படும்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர், இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெற கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளார். விருப்பமுள்ளோர், www.tahdco.com என்கிற முகவரியில் விண்ணப்பிக்கவேண்டும்.

----

முப்பெரும்விழா

அவிநாசி:

ஒலி - ஒளி அமைப்பு, மேடை அலங்காரம், பந்தல் உள்ளிட்டவை அமைக்கும் அமைப்பாளர்களின் கூட்டமைப்பு தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன். இதன் திருப்பூர் மாநகர கிளை சார்பில், முப்பெரும் விழா ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது. மாநில தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். பொது செயலாளர் மணிமாறன், பொருளாளர் பால்ராஜ் முன்னிலை வகித்தனர். மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வனத்திற்குள் திருப்பூர், துப்புரவாளன் அமைப்பு, இனி ஒருவிதி செய்வோம், வேர்கள், அக் ஷய பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளுக்கும், சமூக செயற்பாட்டாளர்களுக்கும் விருது வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

------

பின்னலாடை

ஆர்டர்கள் நம்மை நோக்கி நகருமா?

திருப்பூர், ஆக. 19-

''வளர்ந்த நாடுகள், வங்கதேசத்தில் நீண்டகால முதலீடு செய்வதை தள்ளிப்போடவும், அதற்கு பதிலாக இந்தியாவில் முதலீடு செய்யவும் வாய்ப்புள்ளது. இருப்பினும், ஆர்டர்கள் உடன டியாக நம்மை நோக்கி நகருமா என்று சொல்ல முடியாது'' என்கின்றனர் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள்.

இந்தியாவுடன் நல்ல வர்த்தக உறவு நீடித்ததால், வங்கதேசம் அதிகளவு பய னடைந்தது. இருப்பினும், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில், இந்தியாவை தாண்டி வளர்ச்சி பெற்றுள்ளது. உலக சந்தைகளை கையில் வைத்திருக்கும் சீனாவுக்கு அடுத்த இடத்தில் வங்கதேசம் இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அதிக அளவு ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்கின்றன.

முன்னேறிய வங்கதேசம்


ஆயத்த ஆடை ஏற்று மதியில் வங்கதேசம் இரண்டாமிடத்திலும், இந்தியா நான்காவது இடத்திலும் இருக்கின்றன. காரணம், சீனா, வங்கதேசம், வியட்நாம் போன்ற நாடுகள், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் அதிகம் முன்னேறிவிட்டன.

இந்தியா பருத்தி நுால் பின்னலாடை உற்பத்தியை மட்டுமே நம்பியிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மட்டுமே, பின்னலாடை நிறுவனங்கள், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் கால்பதித்து வருகின்றன.

மாதம் ரூ.30,000 கோடி


வங்கதேசம், மாதம் ஒன்றுக்கு, 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் செய்கிறது. நமது நாட்டில் இருந்து, 11 ஆயிரம் கோடி முதல் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயத்த ஆடை மட்டுமே ஏற்றுமதியாகிறது. வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு குழப்பத்தால், அந்நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில் பெரிய பாதிப்பு இருக்காது; படிப்படியாக ஆர்டர்கள் இந்தியாவுக்கு மாறவும் வாய்ப்புள்ளதாக ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

உற்பத்தி செலவு குறைவு


அந்நாட்டின் ஆயத்த ஆடை உற்பத்திச்செலவு, நம் நாட்டு உற்பத்திச்செலவை காட்டிலும், 20 சதவீதம் குறைவு. இதன் காரணமாக, ஆர்டர்கள் உடனடியாக இந்தியாவை நோக்கி திரும்பும் என்று எதிர்பார்க்க முடியாது.

வளர்ந்த நாடுகள், வங்கதேசத்தில் நீண்டகால முதலீடு செய்வதை தள்ளிப்போடவும், அதற்கு பதிலாக இந்தியாவில் முதலீடு செய்யவும் வாய்ப்புள்ளது.

வங்கதேச தலைநகர் டாக்காவில் மட்டுமே போராட்டம் இருந்தது; மற்ற இடங்கள் அமைதியாக இருப்பதாக கூறுகின்றனர். இதனால், வர்த்தகத்தில் பெரிய பாதிப்பு இருக்காது என்றே ஆணித்தரமாககூறுகின்றனர்.

திருப்பூருக்குஒரு திருப்பம் வரும்


வங்கதேசம் - ஐரோப்பிய நாடுகள் இடையேயான, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம், 2025ம் ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு பிறகு, இந்தியாவுடன் அந்த வாய்ப்பு தேடிவரும். உலக நாடுகள் மத்தியில், பசுமை சார் உற்பத்தி என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

திருப்பூர், பசுமை சார் உற்பத்தியில் முன்னோடியாக இருப்பதால், திருப்பூருக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகவும் தொழில்துறையினர் கூறுகின்றனர்.

------

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

திருப்பூர், ஆக. 19-

திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி ஆகிய ஐந்து தாலுகாக்களை உள்ளடக்கிய திருப்பூர் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரத்தில் நடத்தப்பட்டுவருகிறது. வழக்கமாக, திருப்பூர் குமரன் ரோட்டிலுள்ள சப்கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும்.

இம்மாதம் முதல், கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டத்தை, ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், இம்மாதத்துக்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், செவந்தாம் பாளையத்தில் உள்ள, திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக கூட்ட அரங்கில், வரும் 21 ம் தேதி நடைபெற உள்ளது. காலை, 10:30 மணிக்கு நடைபெறும் முகாமில், சப்கலெக்டர் சவுமியா, விவசாயிகளின் குறைகளை கேட்டறிகிறார்.

---

கால்கோல் விழா

அவிநாசி, ஆக. 19-

திருமுருகன்பூண்டி நகராட்சி, ராக்கியாபாளையம் பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மஹா கும்பாபிஷேகம் விழா, செப்., 16ம் தேதி நடைபெற உள்ளது.

ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி டிரஸ்ட் சார்பில் ராஜகோபுரங்கள், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ராஜா மாதங்கி, ஸ்ரீமஹா வாராஹி, ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ஸ்ரீ பைரவர் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானம், ஸ்ரீ விது சேகர பாரதி சன்னிதானம், கர்நாடக மாநிலம் பெங்களூரு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் ஸ்ரீ கைலாச ஆஸ்ரம மஹா ஸமஸ்தான பீடாதிபதி ஸ்ரீ ஜஜேயந்திர புரி மஹா ஸ்வாமிகள் முன்னிலையில் கும்பாபி ேஷகம் நடைபெற உள்ளது. நேற்று கோவிலில், கும்பாபிஷேகம் மற்றும் யாகசாலை பணிகளுக்கான கால்கோல் நடும் விழா நடந்தது.

ஸ்ரீ சபேஷ சிவாச்சாரியார், பெங்களூரூ வாழும் கலை வேதாகம பாடசாலை, வேத விஞ்ஞான மஹா வித்யாபீடம் முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம், ஜகன் மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி டிரஸ்ட் தலைவர் ஞானகுரு, லாவண்யா, நித்தின், வழக்கறிஞர் சத்யநாராயணன், வீரப்பன் அண்ட் கோ மணி, அபெக்ஸ் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

-----

22ல் கும்பாபிேஷகம்

திருப்பூர், ஆக. 19-

திருப்பூர், சோளிபாளையம் ஸ்ரீசெல்வ ராஜகணபதி கோவில் கும்பாபிேஷகம், வரும் 22ம் தேதி நடக்கிறது.

இக்கோவில், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு, துர்க்கை, பாலகணபதி, பாலமுருகன், நவக்கிரஹம், குப்பாத்தாளம்மன், கன்னிமார், அரசமரத்து விநாயகர் சன்னதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

கும்பாபிேஷக விழா, நாளை (20ம் தேதி) துவங்குகிறது. சர்வசித்தி விநாயகர் கோவிலில் இருந்து, முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி, மாலை, 6:30 மணிக்கு முதல் கால யாக பூஜைகள் நடக்கிறது.

வரும் 21ல் இரண்டாம் கால யாகபூஜை, உபசார வழிபாடு, சதுர்வேத பாராயணம்; மாலை, 6:00 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற உள்ளது. வரும், 22ம் தேதி காலை, 5:30 மணிக்கு, நான்காம் கால யாகபூஜைகள் துவங்குகிறது. நிறைவேள்வி பூஜைகளை தொடர்ந்து, யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்படுகின்றன.

காலை, 8:10 மணி முதல் 8:40 மணிக்குள், மூலவர் விமான கலசம் கும்பாபிேஷகமும், செல்வ ராஜகணபதி மற்றும் பரிவார தெய்வங்கள் கும்பாபிேஷகமும் நடக்கிறது. சர்வசாதக முன்னேற்பாடுகளை, கருங்கல்பாளையம் சுந்தரேச சிவாச்சாரியார் தலைமையிலான, சிவானந்த சிவம், சுரேந்திர சிவம் குழுவினர் செய்து வருகின்றனர். ஏற்பாடுகளை, திருப்பணிக்குழுவினர், சோளிபாளையம் ஊர் பொதுமக்களும் செய்து வருகின்றனர்.

---

குண்டம் திருவிழா

அனுப்பர்பாளையம், ஆக. 19-

குன்னத்துார் அடுத்த ஆதியூர் வெள்ளியம்பதியில் பிரசித்திபெற்ற பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது.

கோவில் குண்டம் திருவிழா கடந்த முதல் தேதி, பத்ரகாளி அம்மனுக்கு பூச்சாட்டு விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று அதிகாலை 5:00 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி துவங்கியது. ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பராசக்தி கோஷத்துடன் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை அறங்காவலர்கள் குழு தலைவர், நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.

---

'ஹவுரா அந்தியோதயா' திருப்பூரில் நிற்குமா?

திருப்பூர், ஆக. 19-

திங்கள்தோறும் எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் ஹவுரா அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (எண்: 22878) பாலக்காடு, கோவை கடந்து ஈரோடு, சேலம் வழியாக மூன்றாவது நாள், மேற்கு வங்கம், ஹவுரா சென்றடைகிறது.

மறுமார்க்கமாக சனிக்கிழமை ஹவுராவில் புறப்படும் ரயில் திங்கள்கிழமை எர்ணாகுளம் வந்தடைகிறது. இந்த ரயில் திருப்பூரில் நிற்பதில்லை.

கடந்த, 15ம் தேதி, கேரள மாநிலம், ஆலுவா ஸ்டேஷனில் ரயில் நின்று செல்ல ஒப்புதல் வழங்கப்பட்டது. இதேபோல், திருப்பூரிலும் நின்று செல்ல ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பு. ரயிலில் உள்ள, 15 பெட்டிகளும் முன்பதிவில்லாத இல்லாத பொது பெட்டி. திருப்பூரில் இருந்து ஹவுரா பயணிப்போருக்கு எளிதாக இருக்கும்.

தெற்கு ரயில்வே, சேலம் கோட்டத்தில் அதிக வருவாய் அள்ளித்தரும் ஸ்டேஷன்களில் திருப்பூரும் உள்ளது. இதை மனதில் கொண்டு, திருப்பூரில் இந்த ரயில் நிற்க ஒப்புதல் தர வேண்டும்.

---

குடியிருப்புகளில் மழைநீர்

திருப்பூர், ஆக. 19-

திருப்பூர், மங்கலம் ரோடு, கே.வி.ஆர்., நகர் ஆகிய பகுதிகளில் சாக்கடை கால்வாய்களில் அதிகளவில் அடைப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. மழை நாட்களில் வடிகால்களில் செல்ல வழியின்றி ரோட்டில் சென்று பாய்வது சகஜமாக உள்ளது.

பல்வேறு பகுதிகளில் மழை நீரும், சாக்கடை கழிவு நீரும் சேர்ந்து ரோட்டில் சென்று பாய்வதும், போக்குவரத்து அவதியும், சிறு விபத்துகளும் ஏற்படுவதும் அடிக்கடி நடக்கிறது.

தற்போது மழைக்காலம் துவங்கவுள்ள நிலையில் 42 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை குழாய்கள்; திறந்த நிலை சாக்கடை கால்வாய்கள் ஆகியவற்றில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றவும், அடைப்புகளை சரிர செய்து, கழிவு நீர் தேங்காமல் செல்லவும் நடவடிக்கை எடுக்க, கவுன்சிலர் அன்பகம் திருப்பதி கோரிக்கை விடுத்தார்.

அதையடுத்து இப்பணிக்கான அடைப்பு நீக்கும் வாகனம் மங்கலம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகள் சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

மேலும், குடியிருப்பு பகுதிகளில் உள்ள கால்வாய்களும் துார் வாரி சுத்தம் செய்யும் வகையில், பணிகள் துவங்கியுள்ளதாகவும், இதன் மூலம் எதிர்வரும் மழை நாட்களில் இப்பகுதியில் மழை நீர் எங்கும் தேங்காமலும், கழிவு நீருடன் சேர்ந்து வெளியேறாமலும் தடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

--------

ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் பணி வேகம் பெறுமா?

அவிநாசி, ஆக. 19-

அவிநாசி வட்டம், கணியாம்பூண்டியில், தமிழ்நாடு கார் வியாபாரிகள் மற்றும் ஆலோசகர்கள் நல மாநில கூட்டமைப்பின் 7ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. இந்த அமைப்பில், பழைய கார்களை வாங்கி விற்கும் வியாபாரிகள் 15,000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

மாவட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமை ஏற்றார். தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணைமேயர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில தலைவர் ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் சிறப்புரையாற்றினார். சங்க உறுப்பினர்களுக்கு நினைவு பரிசாக கடிகாரம் மற்றும் ஐந்து லட்சம் மதிப்பீட்டில் காப்பீடுகள் வழங்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், விரைவில் பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன ஆர்.சி., புத்தகம் தபால் துறை மூலம் அனுப்புவதால் வியாபாரிகள் பாதிப்படைகின்றனர். எளிய முறையில் வியாபாரிகளுக்கு விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

----

கவிதைப்போட்டி

திருப்பூர்:

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க, பொன்விழா ஆண்டையொட்டி திருப்பூர் மாவட்ட அளவிலான கவிதைப் போட்டி பொங்கலுாரில் நடந்தது. ஒன்றிய குழு துணை தலைவி அபிராமி அசோகன் கவிதை போட்டியை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி பேசுகையில், 'மக்களின் அன்றாட பிரச்னைகளை கவிதைகளாக எழுத வேண்டும். ஜனநாயகம், சமத்துவத்தை முன்னெடுக்க வேண்டும்' என்றார். கவிஞர் வெற்றிச்செல்வி பேசினார். மாவட்டத் துணைத் தலைவர் நாட்ராயன், வட்டார தலைவர் லீலா கிருஷ்ணன், பொருளாளர் சின்னச்சாமி, தி.மு.க., பொங்கலுார் ஒன்றிய செயலாளர் அசோகன், கவிஞர்கள் நறுமுகை, உடுமலை துரையரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us