/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தெற்கு குறுமைய டென்னிஸ் 'பிளாட்டோஸ்' பள்ளி அபாரம்
/
தெற்கு குறுமைய டென்னிஸ் 'பிளாட்டோஸ்' பள்ளி அபாரம்
ADDED : செப் 04, 2024 02:12 AM

திருப்பூர்;திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான இருபாலருக்கான டென்னிஸ் போட்டி, ஆண்டிப்பாளையம் ஓம் ஸ்ரீ டென்னிஸ் அகாடமியில் நடந்தது.
இதில் பங்கேற்ற திருப்பூர் பிளாட்டோஸ் அகாடமி பள்ளி மாணவர்கள், அனைத்து நிலை போட்டிகளிலும் வென்று, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். 14 வயது மாணவர் ஒற்றையர் பிரிவில் பிரனேஷ் வெற்றி பெற்றார்.
இரட்டையர் பிரிவில் பிரனேஷ், பிரணவ் ஜோடி, 17 வயது மாணவர் ஒற்றையர் பிரிவில் பிரணவ், இரட்டையர் பிரிவில் அஷ்வின், ரித்திஷ் ஜோடி முதலிடம் பிடித்தனர். 19 வயது மாணவர் ஒற்றையர் பிரிவில் இனியவன், முதலிடம் பிடித்தார்.
மேலும், 14 வயது மாணவியர் ஒற்றையர் பிரிவில் பிரித்விகா, இரட்டையர் பிரிவில் பிரித்விகா, மோகிதாஸ்ரீ ஜோடியும், 17 வயது மாணவியர் ஒற்றையர் பிரிவில் ஆராஜெஸி, இரட்டையர் பிரிவில் ஸ்ரீநிதி, ஆராஜெஸி ஜோடியும், 19 வயது மாணவியர் ஒற்றையர் பிரிவில் திவ்யஜனனி, இரட்டையர் பிரிவில் திவ்யஜனனி, ரிதன்யா ஜோடி முதலிடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சியாளர்களை சந்தோஷ், சுரேஷ் ஆகியோரை பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன், அறங்காவலர் கிறிஸ்ல்டோ லோபஸ், முதல்வர் ஸ்ரீகுமாரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
---
தெற்கு குறுமைய டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற பிளாட்டோஸ் பள்ளி மாணவ, மாணவியர்.