/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூளிக்குளம் நிறைந்தது; மக்களிடம் ததும்பியது மகிழ்ச்சி
/
மூளிக்குளம் நிறைந்தது; மக்களிடம் ததும்பியது மகிழ்ச்சி
மூளிக்குளம் நிறைந்தது; மக்களிடம் ததும்பியது மகிழ்ச்சி
மூளிக்குளம் நிறைந்தது; மக்களிடம் ததும்பியது மகிழ்ச்சி
ADDED : ஆக 25, 2024 12:43 AM

திருப்பூர்;திருப்பூர் மூளிக்குளம் நிறைந்து உபரிநீர் வெளியேறுவதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சியின் மேற்கு எல்லை துவக்கத்தில், நொய்யலில் இருந்து தண்ணீர் பெறும் ஆண்டிபாளையம் குளம் உள்ளது. அதேபோல், கிழக்கு எல்லை முடியும் இடத்தில், மூளிக்குளம் உள்ளது.
மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை வழிகாட்டுதலுடன், வேர்கள் அமைப்பு இக்குளத்தை பராமரித்து வருகிறது. புதர்மண்டி கிடந்த வாய்க்கால், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிதியுதவியுடன், துார்வாரி சுத்தம் செய்யப்பட்டது.
அணைக்காடு தடுப்பணையில் இருந்து, ராஜவாய்க்கால் வழியாக, கடந்த, 10 நாட்களாக குளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. ஐந்து நாட்களில், குளம் நிரம்பியது. உபரிநீர் வெளியேறியதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேர்கள் அமைப்பினர் கூறுகையில்,'நொய்யல் ஆற்றில் தண்ணீர் குறைந்ததால், குளத்துக்கு தண்ணீர் எடுப்பது நிறுத்தப்படும். வாய்க்காலின் பல இடங்களில், கழிவுநீர் கலக்கிறது; சில இடங்களில் சரி செய்துவிடடோம். மாநகராட்சி உதவியுடன், மற்ற இடங்களிலும், வாய்க்காலில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும்,' என்றனர்.
இடையே சாக்கடை கழிவு கலப்பதால், குளத்தில் ஆகாய தாமரை படர்வதை கட்டுப்படுத்த முடியவில்லை. சாக்கடை கழிவு குளத்துக்கு வரும் வாய்க்காலில் கலப்பது முழுமையாக தடுக்கப்பட வேண்டும். நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், மீண்டும் தண்ணீர் திறந்து, குளத்தில் புதிய தண்ணீர் தேக்கப்படும்,' என்றனர்.
---
திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள மூளிக்குளம் நிரம்பியது.