/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புத்துயிர் பெறும் நீரோடை! துார்வாரும் பணி மும்முரம்: விவசாயிகள் மகிழ்ச்சி
/
புத்துயிர் பெறும் நீரோடை! துார்வாரும் பணி மும்முரம்: விவசாயிகள் மகிழ்ச்சி
புத்துயிர் பெறும் நீரோடை! துார்வாரும் பணி மும்முரம்: விவசாயிகள் மகிழ்ச்சி
புத்துயிர் பெறும் நீரோடை! துார்வாரும் பணி மும்முரம்: விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : மார் 07, 2025 03:42 AM

பல்லடம்; பல்லடம் நகரப்பகுதியில் உள்ள நீரோடை துார்வாரும் பணிகள் நடப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பல்வேறு கிராமங்களைக் கடந்து, பல்லடம் நகரப் பகுதி வழியாக செல்லும் நீரோடை, பச்சாபாளையம், ஒன்பதாம் பள்ளம், தெற்குபாளையம் குட்டைகளைக் கடந்து, சின்னக்கரை ஓடை வழியாக நொய்யலை சென்றடைகிறது. முந்தைய காலங்களில், நீர் பெருக்கெடுத்து ஓடி வந்த இந்த நீரோடையில், ஆக்கிரமிப்புகள் அதிகரித்தும், முட்புதர்கள் மண்டியதாலும், நீரோட்டம் தடைபட்டது. உள்ளாட்சி நிர்வாகங்கள், பொதுமக்களின் அலட்சியம் காரணமாக, கழிவுநீர் செல்லும் வாய்க்காலாக இது மாறிவிட்டது. குறிப்பாக, பல்லடம் நகரப் பகுதி வழியாக செல்லும் இந்த நீரோடையில்,
சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்தும், குப்பை கழிவுகள் நிறைந்தும் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. இதன் காரணமாக, தேங்கி நிற்கும் கழிவுநீரில், புழுக்களும், விஷ ஜந்துக்களும் பெருகிவிட்டன. கொசவம்பாளையம் - -வடுகபாளையம் செல்லும் ரோட்டில் உள்ள ஓடையின் ஒரு பகுதி குப்பை கிடங்காகவே மாறிவிட்டது.
ஓடையை துார்வார வேண்டும் என, பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது, நகராட்சி நிர்வாகம் ஒருபுறமும் வனம் அமைப்பு மற்றொருபுறமுமாக ஓடையை துார்வாரும் பணியை கையில் எடுத்துள்ளன.
ஓடையை சூழ்ந்துள்ள சீமை கருவேல மரங்கள், புதர்கள் ஆகியவை, அகழ் இயந்திரங்களின் உதவியுடன் வேருடன் அகற்றப்பட்டு வருகின்றன. தாலுகா அலுவலகத்துக்கு எதிரே உள்ள, 4 ஏக்கர் பரப்பளவுள்ள பொன்காளியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை துாய்மைப்படுத்தி, இங்கு, கோ சாலை அமைக்கவும், மரக்கன்றுகள் நடவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், ஓடையில் சேகரமாகும் கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, ஓடையை துார் வாரும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. நீண்ட காலமாக, கழிவுகள், குப்பைகளின் பிடியில் இருந்த ஓடைக்கு இதனால், புத்துயிர் கிடைத்துள்ளது.
நகரப் பகுதியில் உள்ள ஓடையில், சீமை கருவேல மரங்கள், புதர்களை முழுமையாக அகற்றுவதுடன், ஆக்கிரமிப்பை கண்டறிந்து அகற்ற வேண்டும். எதிர்வரும் நாட்களில் குப்பை, கழிவுகள் ஓடையில் கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதுடன், மழைநீர் செல்லும் வகையில் துார்வார வேண்டும்