/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலவன் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் அபாரம்
/
வேலவன் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் அபாரம்
ADDED : மே 08, 2024 12:05 AM

திருப்பூர்;திருப்பூர், பலவஞ்சிபாளையம், வேலவன் மெட்ரிக் பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவ, மாணவியர் சாதனை படைத்துள்ளனர்.
மாணவி அக் ஷயா, 600க்கு, 592 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி பூமிகா, 600க்கு 579 மதிப்பெண்களுடன் இரண்டாமிடமும், நவீன் சந்தோஷ் மற்றும் புவியாழினி ஆகியோர், 600க்கு 570 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
கம்ப்யூட்டர் பயன்பாடு பாடத்தில், ஏழு மாணவர்களும், கணினி அறிவியல் பாடத்தில், நான்கு மாணவர்களும், பொருளியல் பாடத்தில் இரண்டு மாணவர்களும், கணிதம் மற்றும் கணக்குப்பதிவியல் பாடங்களில், தலா ஒருவரும், 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கூடுதல் விவரங்களுக்கு, 97866 02888, 96266 61110 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, வேலவன் மெட்ரிக் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

