/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளியில் முப்பெரும் விழா மரக்கன்று நட்ட மாணவர்கள்
/
அரசு பள்ளியில் முப்பெரும் விழா மரக்கன்று நட்ட மாணவர்கள்
அரசு பள்ளியில் முப்பெரும் விழா மரக்கன்று நட்ட மாணவர்கள்
அரசு பள்ளியில் முப்பெரும் விழா மரக்கன்று நட்ட மாணவர்கள்
ADDED : ஆக 06, 2024 06:15 AM

உடுமலை: குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், வாழ்க்கையில் குறிக்கோள் தினம், மரக்கன்று நடும் விழா, நாட்டுநலப்பணி திட்ட துவக்க விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் மாரியப்பன் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். வாழ்க்கையின் குறிக்கோள் தினம் குறித்து நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் ரமேஷ் விளக்கமளித்தார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் தனலட்சுமி, மாணவர்களின் பெற்றோர் மரக்கன்றுகளை நட்டனர். வேலைவாய்ப்புகள் குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடினர். பொருளியல் ஆசிரியர் மகுடீஸ்வரன் நன்றி தெரிவித்தார்.