/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விபத்தினால் கிடைத்தது விமோசனம் ;பள்ளிக்கு அமைந்தது சுற்றுச்சுவர்
/
விபத்தினால் கிடைத்தது விமோசனம் ;பள்ளிக்கு அமைந்தது சுற்றுச்சுவர்
விபத்தினால் கிடைத்தது விமோசனம் ;பள்ளிக்கு அமைந்தது சுற்றுச்சுவர்
விபத்தினால் கிடைத்தது விமோசனம் ;பள்ளிக்கு அமைந்தது சுற்றுச்சுவர்
ADDED : மே 06, 2024 11:24 PM

பல்லடம்:மேற்கு பல்லடம் அரசுப் பள்ளி சுற்றுச்சுவருக்கு விபத்தின் வாயிலாக விமோசனம் கிடைத்துள்ளது.
பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில், மேற்கு பல்லடம் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இப்பள்ளியில், பல ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட சுற்றுச்சுவரானது பலத்த சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது.
சுற்றுச்சுவர் பல இடங்களில் ராட்சத ஓட்டைகள் விழுந்து, பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்து வந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன், -திருச்சி நோக்கி சென்ற லாரியில் இருந்து ராட்சத இரும்பு ரோல்கள் கீழே விழுந்ததில், ரோட்டில் உருண்டோடி பள்ளியின் சுற்றுச்சுவர் மீது மோதியதில் சுற்றுச்சுவர் சேதமடைந்தது. இதனால் தற்போது சுற்றுச்சுவர் முழுமையாக இடித்து தள்ளப்பட்டு புதிய சுவர் கட்டும் பணி துவங்கியுள்ளது.
இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், 'எப்போது வேண்டுமானாலும் இடியும் என்ற நிலையில் அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இருந்தது.
இருப்பினும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்தனர். இதற்கிடையே, லாரியிலிருந்து கழன்று விழுந்த இரும்பு ரோல்களால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது சுற்றுச்சுவருக்கு விமோசனம் கிடைத்துள்ளது,' என்றனர்.