/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி
ADDED : ஏப் 09, 2024 09:06 PM
உடுமலை;பொள்ளாச்சி லோக்சபா தொகுதி உடுமலை, மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளில் பேலட் பேப்பர் பொருத்தும் பணியும், வி.வி., பேட்டில் சின்னங்கள் பதிவேற்றும் பணியும் இன்றும், நாளையும் நடக்கிறது.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட, உடுமலை சட்டசபை தொகுதியில் 129 ஓட்டுப்பதிவு மையங்களில், 295 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. ஓட்டுப்பதிவுக்கு தேவையான 355 'பேலட்' யூனிட், 355 கன்ட்ரோல் யூனிட், 385 'விவி பேட்' இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
மடத்துக்குளம் சட்டசபை தொகுதியில், 117 ஓட்டுப்பதிவு மையங்களில், 287 ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தும், 347 பேலட் யூனிட், 347 கன்ட்ரோல் யூனிட், மற்றும் 375 விவி பேட் இயந்திரங்கள் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் இம்மையங்களில், பேலட் யூனிட் இயந்திரத்தில், ஓட்டுச்சீட்டு பொருத்தும் பணி நடக்கிறது.
ஓட்டுப்பதிவின் போது, வாக்காளர்கள், தாங்கள் விரும்பிய வேட்பாளருக்கு ஓட்டளித்ததை, உறுதி செய்துகொள்வதற்காக வி.வி.பேட் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பட்டனை அழுத்தும்போது, வி.வி.பேட்டில், வேட்பாளரின் சின்னம் பொறித்த ரசீது தோன்றும். இதற்காக, வி.வி.பேட்டில் சின்னங்கள் லோட் செய்யும் பணியும் நடைபெற உள்ளது.
பெங்களூருவிலிருந்து பெல் இன்ஜினியர் குழுவினர் தொகுதிக்கு இருவர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், வி.வி.பேட்டில் சின்னங்கள், நோட்டா சின்னத்தை இயந்திரத்தில் பதிவேற்றும் பணியை மேற்கொள்ளவுள்ளனர்.

