sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'மாநில நல்லாசிரியர் விருது சேவைகளை அடையாளப்படுத்துகிறது' ஆசிரியர்கள் பெருமிதம்

/

'மாநில நல்லாசிரியர் விருது சேவைகளை அடையாளப்படுத்துகிறது' ஆசிரியர்கள் பெருமிதம்

'மாநில நல்லாசிரியர் விருது சேவைகளை அடையாளப்படுத்துகிறது' ஆசிரியர்கள் பெருமிதம்

'மாநில நல்லாசிரியர் விருது சேவைகளை அடையாளப்படுத்துகிறது' ஆசிரியர்கள் பெருமிதம்


ADDED : செப் 09, 2024 02:04 AM

Google News

ADDED : செப் 09, 2024 02:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:'மாநில நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பது இந்த சேவைகளை அடையாளப்படுத்தும் வகையில் பெருமையாக உள்ளது,' என, மாநில நல்லாசிரியர்கள் விருது பெற்றவர்கள் தெரிவித்தனர்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி மாநில மற்றும் தேசிய அளவில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. உடுமலையில், மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு

பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தரணி எங்கும் தமிழின் பெருமை


தர்மராஜ், தலைமை ஆசிரியர், முள்ளுபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி: நான் 1999ல் ஆசிரியராக பணியில் இணைந்தேன். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள குருமலை துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த போது மலைவாழ் மக்கள் பெரிதும் வரவேற்பு அளித்தனர்.

அதேபோல் ஆசிரியர்களுக்கு சமூக பொறுப்பும் இருக்கும் வகையில் ரத்ததானம் செய்யும் சேவையும் தொடர்ந்து பின்பற்றுகிறேன். தமிழின் பெருமையை பறைசாற்ற பட்டிமன்ற பேச்சாளராகவும் பயணிக்கிறேன்.

கேரளா மாநிலம் சித்துார், பரிசுக்கல், நெம்மாரா, வண்ணாமடை, முதல் மடை, மறையூர் பகுதி பள்ளிகளில் தமிழின் பெருமை, இலக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கருத்தரங்கில் தொடர்ந்து பேசி வருகிறேன். நல்லாசிரியர் விருது கிடைப்பதிருப்பது என் பணிகளை மேலும் தொடர உத்வேகம் அளித்துள்ளது.

அடிப்படை கல்விக்கு முக்கியத்துவம்


சிவராஜ், பூளவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர். குடிமங்கலம் வட்டாரம்.: ஆசிரியர் பணியில் அர்ப்பணிப்பு உணர்வோடு இருக்க வேண்டுமென, துவக்கத்தில் எடுத்த உறுதியை இப்போது வரை பின்பற்றுகிறேன். பள்ளியை விட்டு செல்ல எப்போதும் மனமில்லாமல், நான்கு ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் பணியில் உள்ளேன்.

மாநிலம், மாவட்டம், வட்டார அளவில் எண்ணும் எழுத்தும் பயிற்சியில் சிறந்த கருத்தாளராக பணியாற்றி உள்ளேன்.

பள்ளிக்கு தேவையான உதவிகளை தன்னார்வலர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி, பள்ளியின் கட்டமைப்பும் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்களும் கல்வியின் முக்கியத்துவத்தை உணரும் வகையில் அவர்களுக்கு பரிசளித்து ஊக்குவித்து வருகிறேன்.

பள்ளி வளாகத்தில் மட்டுமின்றி, மாணவர்கள் இருக்கும் பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பதற்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதற்கான செயல்நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது.

மாநில நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பது இந்த சேவைகளை அடையாளப்படுத்தும் வகையில் பெருமையாக உள்ளது.

எளிய முறை கல்விக்கு கிடைத்த பரிசு


செல்வராஜ், எலையமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்.: கற்றலை எளிமையாக்கி பொது அறிவை மேம்படுத்திக்கொள்வதற்கும், பாடங்களை மாணவர்களுக்கு ஏற்ப பாடல்களாக மாற்றித்தான் வகுப்புகள் நடக்கிறது. கொரோனா காலத்திலும் இடைவிடாது மாணவர்களின் நலனுக்காக அவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தினோம். இந்த விருது கிடைப்பதற்கு மாணவர்களின் பெற்றோரும் முக்கிய காரணமாக உள்ளனர்.

விருது பெற்றதில் மகிழ்ச்சியாக இருப்பதோடு, இன்னும் வேகமாக கற்பித்தலை தொடர வேண்டுமென புத்துணர்ச்சி கிடைத்துள்ளது.

என் பெற்றோரின் கனவு நிறைவேறியுள்ளது. ஓய்வையும், தொய்வையும் தவிர்த்து சுறுசுறுப்பாக இயங்க செய்து, மீண்டும் என்னை புதுப்பித்துக் கொள்ள துாண்டுதலாக உள்ளது.

விருதின் வாயிலாக கிடைக்கும் தொகையில், பள்ளிக்கும் மாணவர்களுக்கும் பயன்பெறும் வகையில் பொருள் வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளேன்.

நல்லாசிரியர் விருது பள்ளிக்கான வெற்றி


பூரணி, தலைமை ஆசிரியர், எஸ்.கே.பி.மேல்நிலைப்பள்ளி உடுமலை: இருபத்தி எட்டு ஆண்டுகள் கணிதவியல் ஆசிரியராகவும், பின், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியதன் அடையாளம்தான் இந்த விருது. எப்போதும், நுாறு சதவீத தேர்ச்சி என்ற இலக்கை நோக்கி பள்ளியை பயணிக்க செய்தோம்.

ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை புதிய கணித பாடப்புத்தகம் உருவாக்க அமைக்கப்படும் பாடத்திட்டக்குழுவினர் பணி செய்கிறேன். புதிய பாடத்திட்டம், புத்தக உருவாக்குவதிலும் பங்களிப்பு உள்ளது.

பள்ளியில் மாணவர்களிடம் தமிழ் மீதான பற்றை மேம்படுத்த பாரதியார் பிறந்தநாளையொட்டி சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு அவர்களை ஊக்குவிக்கிறோம். நல்லாசிரியர் விருது கிடைப்பதிருப்பது பள்ளிக்கான வெற்றியாக உள்ளது.






      Dinamalar
      Follow us