/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசாரணைக்கு அழைத்து விரல் உடைப்பு போலீசார் மீது பாதிக்கப்பட்டவர் புகார்
/
விசாரணைக்கு அழைத்து விரல் உடைப்பு போலீசார் மீது பாதிக்கப்பட்டவர் புகார்
விசாரணைக்கு அழைத்து விரல் உடைப்பு போலீசார் மீது பாதிக்கப்பட்டவர் புகார்
விசாரணைக்கு அழைத்து விரல் உடைப்பு போலீசார் மீது பாதிக்கப்பட்டவர் புகார்
ADDED : செப் 14, 2024 02:50 AM

பல்லடம்,:திருப்பூர் மாவட்டம், பல்லடம் - தெற்குபாளையத்தை சேர்ந்தவர் அருண்பிரசாத், 35; பனியன் தொழிலாளி. இவருக்கும், அருகில் வசிக்கும் முத்தம்மாள், 60, என்பவருக்கும் இட பிரச்னை உள்ளது. முத்தம்மாள் புகாரில், அருண்பிரசாத்திடம் விசாரிக்க பல்லடம் போலீசார் அவரை அழைத்துச் சென்றனர்.
விசாரணையின் போது, தன்னை அடித்து துன்புறுத்தியதில், இடது கை சுண்டு விரல் உடைந்து விட்டதாக, அருண்குமார், மனித உரிமை ஆணையத்தில் புகார் கூறியுள்ளார்.
அருண்பிரசாத் கூறியதாவது:
முத்தம்மாள் வீடு இடியும் நிலையில் மோசமாக உள்ளது. சுவர்கள், மேற்கூரை அவ்வப்போது பெயர்ந்து வந்த நிலையில், இதற்கு நான் தான் காரணம் என்று, போலீசில் புகார் அளித்தார். ஆக., 26ல், விசாரணைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை, 'தனியாக உள்ள பெண்ணிடம் தகராறு செய்கிறாயா?' என்று கூறி, 'இவனை ஒரு சர்வீஸ் பண்ணி விடுங்கள்' என்றார். ஓர் அறைக்கு அழைத்துச் சென்ற ஜெகநாதன், குமரேசன், அருண் ஆகிய போலீசார், பி.வி.சி., பைப்பைக் கொண்டு, கால் மற்றும் கைகளில் பலமாக அடித்தனர்.
பின்னர், என்னிடம் எழுதி வாங்கி அனுப்பினர். போலீசார் அடித்ததில், என் இடது கையில் சுண்டு விரல் முறிந்தது. விரல் முறிவுக்கு காரணமான, இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது மனித உரிமை கமிஷனில் புகார் அளித்துள்ளேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இது தொடர்பாக பல்லடம் டி.எஸ்.பி., விஜிகுமாரிடம் கேட்டதற்கு, ''இது குறித்த தகவல் வரவில்லை. விசாரித்து சொல்கிறேன்,'' என்றார்.