/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராம ரோட்டை விரிவுபடுத்தணும்; மண் அரிப்பால் பாதிப்பு
/
கிராம ரோட்டை விரிவுபடுத்தணும்; மண் அரிப்பால் பாதிப்பு
கிராம ரோட்டை விரிவுபடுத்தணும்; மண் அரிப்பால் பாதிப்பு
கிராம ரோட்டை விரிவுபடுத்தணும்; மண் அரிப்பால் பாதிப்பு
ADDED : செப் 04, 2024 11:21 PM
உடுமலை : செல்லப்பம்பாளையம் - தேவனுார்புதுார் ரோட்டை விரிவுபடுத்தி, விபத்துகளை தவிர்க்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை தேவனுார்புதுாரில் இருந்து, செல்லப்பம்பாளையம் வழியாக செல்லும் ரோட்டில், உடுமலை மற்றும் பொள்ளாச்சியில், இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரோடு, நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்ட எல்லை வரை, பல ஆண்டுகளாக விரிவுபடுத்தப்படாமல் உள்ளது. ரோட்டின் இருபுறங்களிலும், மண் அரிப்பு ஏற்பட்டு, குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
இதனால், பஸ், லாரி உட்பட வாகனங்கள் வரும் போது, இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள், நிலைதடுமாறி, விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. ரோடு குறுகலாக இருப்பதால், அவ்வழியாக கனரக வாகனங்கள் செல்வதிலும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் தேவனுார்புதுாரில் இருந்து, செல்லப்பம்பாளையம் வழியாக செல்லும் ரோட்டை விரிவுபடுத்தி, ரோட்டோரத்தில், உள்ள குழிகளை சீரமைக்க வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.