/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணி தீவிரம்
/
ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணி தீவிரம்
ADDED : ஏப் 07, 2024 03:20 AM
திருப்பூர்: ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான, ஓட்டு எண்ணிக்கை மையம், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில் அமைகிறது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, கோபி, பெருந்துறை, அந்தியூர், பவானி தொகுதிகளுக்கு, தனித்தனியே, 'ஸ்ட்ராங் ரூம்' மற்றும் ஓட்டு எண்ணும் வளாகம் அமைக்கப்படுகிறது.
'சிசிடிவி' கேமரா அமைப்பது, இணையதள இணைப்பு பெறுவது, மாவட்ட கட்டுப்பாட்டு அறை, பார்வையாளர்கள் அறை என, பல்வேறு பணி நடந்து வருகிறது. 'ஸ்ட்ராங் ரூம்' பணி முடிந்துள்ள நிலையில், ஓட்டு எண்ணும் வளாகம் அமைக்கும் பணி துவங்க இருக்கிறது. இதனால், வகுப்பறையில் இருந்த பெஞ்ச் - டெஸ்க்குகள், இடமாற்றம் செய்யப்படுகின்றன. அனைத்து பெஞ்ச் - டெஸ்க்குகளும், மற்றொரு இடத்துக்கு மாற்றி வைக்கப்பட உள்ளது. ஓட்டுப்பதிவுக்கு முன்னதாக, ஓட்டு எண்ணிக்கை நடக்கும் வளாகமும் முழு அளவில் தயாராக வேண்டும். அதற்கான பணி, இரவு, பகலாக நடந்து வருவதாக, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

