/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீரன் சின்னமலை மகளிர் கல்லுாரி முதல் ஆண்டு மாணவியர் சங்கமம்
/
தீரன் சின்னமலை மகளிர் கல்லுாரி முதல் ஆண்டு மாணவியர் சங்கமம்
தீரன் சின்னமலை மகளிர் கல்லுாரி முதல் ஆண்டு மாணவியர் சங்கமம்
தீரன் சின்னமலை மகளிர் கல்லுாரி முதல் ஆண்டு மாணவியர் சங்கமம்
ADDED : ஜூலை 06, 2024 01:14 AM

திருப்பூர்;திருப்பூர், அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் அறக்கட்டளையினரால் துவங்கப்பட்ட, அவிநாசி அடுத்த வஞ்சிபாளையம், தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதலாம் ஆண்டு மாணவிகளின் சங்கமம், 'நிரந்தரா -24' நடந்தது.
அறக்கட்டளை உப தலைவர் டிக்சன் குப்புசாமி வரவேற்றார். கல்லுாரி தலைவர் பெஸ்ட் ராமசாமி தலைமை தாங்கி பேசினார். ஸ்தாபன தலைவர் ஜீப்ரா பழனிசாமி முன்னிலை வகித்தார். பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் கோவை சாந்தாமணி, 'தீரன் சின்னமலை வரலாறு, பெண்களின் வாழ்க்கை முன்னேற்றம்' குறித்து பேசினார்.
அறக்கட்டளை பொருளாளர் கந்தசாமி, உபதலைவர் முருகசாமி, செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் வாழ்த்துரை வழங்கினர். கல்லுாரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இணைச்செயலாளர் துரைசாமி நன்றி கூறினார்.