/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூட்டிய வீடுகளில் பணம், நகை திருட்டு
/
பூட்டிய வீடுகளில் பணம், நகை திருட்டு
ADDED : மே 05, 2024 11:26 PM
உடுமலை:உடுமலையில் வீடுகளின் பூட்டை உடைத்து, 2 பவுன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் திருடப்பட்டது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
உடுமலை யு.கே.பி., நகரைச்சேர்ந்தவர் சந்திரசேகர், 47; அரசு மருத்துவமனையில், மயக்கவியல் டாக்டராக பணியாற்றுகிறார்.
இவர் கடந்த 2ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, அந்தமான் சென்றுள்ளார். நேற்று முன்தினம், அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்தது குறித்து அருகில் இருந்தவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் பார்த்த போது, மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, 3 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதே போல், உடுமலை ரத்தினபுரி நகரைச்சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வைரமுத்து, வெளியூருக்கு சென்று விட்டார்.
பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பார்த்த போது, வைரமுத்துவின் வீட்டு கதவு திறந்து கிடந்தள்ளது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், பூட்டை உடைத்து, உள்ளே இருந்த, 2 பவுன் நகைகளை, மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. உடுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.