/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மைதானங்கள் பராமரிப்பில் அக்கறையில்லை; நிதி ஒதுக்கியும் பயனில்லை
/
மைதானங்கள் பராமரிப்பில் அக்கறையில்லை; நிதி ஒதுக்கியும் பயனில்லை
மைதானங்கள் பராமரிப்பில் அக்கறையில்லை; நிதி ஒதுக்கியும் பயனில்லை
மைதானங்கள் பராமரிப்பில் அக்கறையில்லை; நிதி ஒதுக்கியும் பயனில்லை
ADDED : மே 27, 2024 11:25 PM
உடுமலை:கிராமங்களில் பல்வேறு திட்டங்களின் கீழ், உருவாக்கப்பட்ட மைதானங்கள் தொடர் பராமரிப்பு இல்லாமல், மாயமாகி வருவதால், அனைத்து தரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றிய ஊராட்சிகளில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், கிராமப்புற இளைஞர்கள் தங்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில், மைதானத்துக்கென தனியிடம் ஒதுக்கப்பட்டு, உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இதில், வாலிபால் விளையாட, 'போஸ்ட்', தனியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிற பகுதிகளில், குழந்தைகள் விளையாட, சறுக்கு உட்பட உபகரணங்கள் அமைக்கப்பட்டன.
உடற்பயிற்சி செய்வதற்காக சில கட்டமைப்புகளும், பொருட்களும் ஊராட்சிகளுக்கு இத்திட்டத்தில், ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கிராமங்களில் அதிக வரவேற்பு இத்திட்டத்துக்கு, கிடைத்தது. ஊராட்சி நிர்வாகத்தினர், குறிப்பிட்ட இடைவெளிகளில், பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டனர்.
கடந்த சில ஆண்டுகளாக இந்த பராமரிப்பு முழுவதுமாக கைவிடப்பட்டு, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து, பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியது.
தொடர்ந்து, புதர் மண்டி, சீமை கருவேல மரங்கள், முளைத்து, மைதானத்தை யாருமே பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், கிராம இளைஞர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் மைதானத்திலுள்ள புதர்களை அகற்றி, உபகரணங்களை மாற்றியமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
கிராமங்களில் இருந்த புறம்போக்கு நிலங்கள் மைதானம் அமைக்க தேர்வு செய்யப்பட்டன. யாரும் பயன்படுத்தாமல், புதர் மண்டியதால், மைதானங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.
பல கிராமங்களில், மைதானங்கள், கால்நடைகள் கட்டும் இடமாகவும், வாகனங்களை நிறுத்துமிடமாகவும், மாற்றப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பிலிருந்து மைதானங்களை மீட்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு புகார் மனு வழங்கியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மைதானங்கள் பராமரிப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதியும், ஊராட்சி நிர்வாகத்தினரால் முறையாக பயன்படுத்தப்படவில்லை.
உபகரணங்களும் தரமானதாக இல்லாததால், கோடை விடுமுறை காலத்தில் விளையாட முடியாமல், இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அதிருப்தியில் உள்ளனர்.