/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின்விளக்கு வசதி இல்லை :வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
/
மின்விளக்கு வசதி இல்லை :வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
ADDED : மார் 29, 2024 10:58 PM
உடுமலை;அமராவதி ஆற்றுப்பாலத்தில், மின்விளக்கு வசதி இல்லாததால், வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதற்கு பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையில், மடத்துக்குளம் அமைந்துள்ளது. மேலும் இந்த நகரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால், தினமும் ஆயிரக்கணக்கான பஸ், லாரிகள், கார், கனரக வாகனங்கள் இதன் வழியாக செல்கின்றன.
இந்த இரண்டு மாவட்டங்களை இணைக்கும் வகையில், அமராவதி ஆற்றுப்பாலம் அமைந்துள்ளது. ஆனால், இந்த பாலத்தில், மின்விளக்குகளே, ஒளிரும் பிரதிபலிப்பான்கள் இல்லை.
இதனால், இரவு நேரங்களில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள் பெரும் தவிப்புக்குள்ளாகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய பாலமாக உள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தில், மின்விளக்குகளையும், ஒளிரும் பிரதிபலிப்பான்களை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினரும், மடத்துக்குளம் பேரூராட்சி அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மடத்துக்குளம் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

