/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று சந்திர கிரகணம் நடை அடைப்பு இல்லை
/
இன்று சந்திர கிரகணம் நடை அடைப்பு இல்லை
ADDED : மார் 25, 2024 12:50 AM
திருப்பூர்:இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் பங்குனி உத்திர நாளான இன்று நிகழ உள்ளது.
இந்த நாள் விசேஷமாக கருதப்படுகிறது. பங்குனி உத்திரம், ஹோலி பண்டிகை, சந்திர கிரகணம் என, மூன்றும் ஒரே நாளில், நுாறு ஆண்டுகளுக்கு பின் நிகழ உள்ளது.
இக்கிரகணம், இந்திய நேரப்படி காலை, 10:20 மணிக்கு துவங்கி மாலை, 3:04 வரை நீடிக்கும். இக்கிரஹணத்தின் மொத்த கால அளவு கிட்டதட்ட, 4:30 மணி நேரம் இருக்க உள்ளது. கிரகணத்தின் போது, சந்திரன் பூமியின் நிழலின் வெளிப்புற விளிம்புகள் வழியாக மட்டுமே செல்லும் என்பதால், சந்திரனின் ஒளி லேசாக மட்டுமே குறையும். குறிப்பாக, வானில் தோன்றும் அரிய நிகழ்வை இந்தியாவில் காண முடியாது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே காண முடியும்.
''மீன ராசியில் சூரியன், ராகு சேர்க்கை பெற்று இருக்க, கன்னியில் சந்திரனும் கேதுவும் இணையும் நாளில் கேது கிரகஹஸ்த சந்திர கிரகணம் உருவாகிறது'' என்கின்றனர் ஜோதிடர்கள்.
இக்கிரகணத்தை நாம் பார்க்க முடியாத காரணத்தால், இந்தியாவில் தோஷ காலம் பொருந்தாது. இதனால், கோவில்களில் நடை அடைக்கப்படாமல், வழக்கம் போல் பூஜைகள் நடக்க உள்ளது.

