ADDED : மே 05, 2024 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:உடுமலை பஸ் ஸ்டாண்டில், குப்பை, கழிவுகள் நிறைந்து சுகாதாரமின்றி காணப்படுகிறது.
உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு தினமும், நுாற்றுக்கணக்கான வெளியூர் பஸ்களும், டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன. ஏராளமான பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.
அங்குள்ள கடைகளின் கழிவு நீரும், குப்பையும் பஸ் ஸ்டாண்டிற்குள் விடப்படுகின்றன. இதுனால், துர்நாற்றம் வீசுகிறது. பயணியருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து, நகராட்சி சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.