/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாலாபுறமும் தாறுமாறாக வாகனங்கள் வேகத்தடை இல்லை; விபத்து அபாயம்
/
நாலாபுறமும் தாறுமாறாக வாகனங்கள் வேகத்தடை இல்லை; விபத்து அபாயம்
நாலாபுறமும் தாறுமாறாக வாகனங்கள் வேகத்தடை இல்லை; விபத்து அபாயம்
நாலாபுறமும் தாறுமாறாக வாகனங்கள் வேகத்தடை இல்லை; விபத்து அபாயம்
ADDED : ஜூன் 30, 2024 12:34 AM

திருப்பூர்;திருப்பூர், மங்கலம் ரோடு, குமரன் கல்லுாரி ஸ்டாப் பகுதியில் நாற்புறமும் அதிவேகத்தில் வாகனங்கள் 'பறக்கின்றன'. வேகத்தடை இல்லாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மங்கலம் ரோடு சீரைமக்கப்பட்டது. பாரப்பாளையம் முதல் பெரியாண்டிபாளையம் வரை, ரோடு அகலப்படுத்தப்பட்டது. புதிய தார்ரோடு அமைத்து, ரோட்டின் மையத்தில் கான்கிரீட் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
ரோடு பணியின் போது, குமரன் கல்லுாரி அருகே இருந்த வேகத்தடை அகற்றப்பட்டது. குமரன் கல்லுாரி வீதி ரோடு, நெடுஞ்சாலைத்துறை ரோடு, ரைஸ் மில்ரோடுகள் சந்திக்கும் இடம் என்பதால், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. வேகத்தடை இல்லாததால், நான்கு திசைகளில் இருந்தும் வரும் வாகனங்கள், வேகமாக முந்திச்செல்ல முயற்சிக்கின்றன.
இதனால், வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. விபத்து அபாயம் நீடிப்பதால், அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
''முன்னர் இருந்தது போல் வேகத்தடை அமைக்க வேண்டுமென, நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் வலியுறுத்தியும் பயனில்லை. விபத்து அபாயம் இருப்பதால், குமரன் கல்லுாரி பஸ் ஸ்டாப் அருகே, முன் இருந்ததை போல் ஒன்றுக்கு மேற்பட்ட வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும். இதேபோல், போலீஸ் செக் போஸ்ட் பகுதியிலும் கூடுதல் வேகத்தடை அமைக்க வேண்டும்'' என்கின்றனர் இப்பகுதியினர்.