/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு ஊழியர் - அதிகாரிகள் - பொதுமக்கள் நட்புறவுக்கு பாலமாக 'தின மலர்' நாளிதழ்
/
அரசு ஊழியர் - அதிகாரிகள் - பொதுமக்கள் நட்புறவுக்கு பாலமாக 'தின மலர்' நாளிதழ்
அரசு ஊழியர் - அதிகாரிகள் - பொதுமக்கள் நட்புறவுக்கு பாலமாக 'தின மலர்' நாளிதழ்
அரசு ஊழியர் - அதிகாரிகள் - பொதுமக்கள் நட்புறவுக்கு பாலமாக 'தின மலர்' நாளிதழ்
UPDATED : ஆக 26, 2024 02:25 AM
ADDED : ஆக 25, 2024 10:58 PM

அடுத்த நாளே நடவடிக்கை
வின்சென்ட்ராஜ், ராயபுரம்: 'தினமலர்' நாளிதழின் பல்லாண்டு கால வாசகர் என்ற முறையில், அவ்வப்போது கடிதம் அனுப்பி வந்தேன். தினமலர் 'வாட்ஸ்அப்' எண் மூலம் மட்டும் 400க்கும் அதிகமான புகார்களை அனுப்பியுள்ளேன். அவற்றில், 200க்கும் மேற்பட்டவை மாநகராட்சி மற்றும் பிற துறைகள் மூலம் சீர்செய்யப்பட்டுள்ளது. அடுத்த நாளே நடவடிக்கை இருப்பதால், தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருக்கிறேன்.
தட்டிக்கேட்பது 'தினமலர்' மட்டுமே
ரஞ்சித், எம்.எஸ்., நகர்:
எந்த துறையாக இருந்தாலும், தவறுகளை தட்டிக் கேட்கும் ஒரு நாளிதழாக 'தினமலர்' திகழ்கிறது. விருப்பு, வெறுப்பு இல்லாமல், புகார்களின் உண்மை தன்மையை ஆராய்ந்து, அதற்கேற்ப படங்களுடன் வெளியிடப்படுகிறது. அதிகாரிகள் பார்வைக்குப் படாத இடங்கள் 'தினமலர்' வாட்ஸ் அப் எண் மூலம் படம், செய்தியாக வெளிவந்து பிரச்சனை தீர்வுகளும் காணப்பட்டுள்ளது.
'தினமலர்' பலம் புரிகிறது
மூர்த்தி, சேவூர்: துறையில் உள்ள அதிகாரிகள் அல்லது ஊழியர் நேரில் வந்து ஒரு பிரச்னையைத் தீர்வுகாண, 'தினமலர்' வாட்ஸ்அப் எண் ஒரு பாலமாக செயல்படுகிறது. கல்வித்துறை, மருத்துவம், வட்ட வழங்கல் துறை புகார்களை அதிகம் பகிர்ந்துள்ளேன்; அவற்றுக்கு தீர்வுகளும் கிடைத்துள்ளன. கிராமப்புற பகுதியில் உள்ள பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. 'தினமலர்' நாளிதழில் படத்துடன், செய்தி வந்திருப்பதாக அதிகாரிகள் நிகழ்விடத்துக்கு வந்து விசாரிக்கும் போது தான், தெரிகிறது, 'தினமலர்' நாளிதழின் பலம்.
சீராகிறதா என்பதும் கண்காணிப்பு
செல்வராஜ், மீனம்பாறை: சில துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, புகார் தெரிவிக்க முடிவதில்லை. நெடுஞ்சாலைத்துறை, மின்வாரிய புகார்களை அதிகளவில் அனுப்பியுள்ளேன். அவற்றுக்கு ஓரிரு நாட்களில் தீர்வு கிடைத்துள்ளது. புகார் செய்தி வெளியிடுவது, அவை சீராகி விட்டதாக என்பதையும் 'தினமலர்' நாளிதழ் கண்காணிப்பது ஊக்கம் தருவதாக உள்ளது.
தீர்வு கிடைப்பதால் ஆத்ம திருப்தி
விஜி, கூட்டுறவு நகர்:
ஒருமுறை 'தினமலர்' நாளிதழ் ரோடு பிரச்னை குறித்து படம் அனுப்பினேன். அடுத்த சில நாட்களில் ரோடு போட்டு விட்டனர். அதையும் 'ரியாக் ஷன்' பகுதிக்கு போட்டோவாக எடுத்து அனுப்பினேன். இவ்வாறு பயணிக்கும் வழியில் பிரச்னையை எடுத்து அனுப்பும் போது, மீண்டும் அந்த வழியாக பயணிக்கும் போது, அவை சரியாகியிருக்கும் போது ஆத்ம திருப்தி ஏற்படுகிறது. பல நாள் தீர்க்கப்படாத அம்மாபாளையம் ரோட்டில் குடிநீர் வீணாகும் பிரச்னை 'தினமலர்' நாளிதழ் வெளியிட்ட ஒரு படத்தால் சரியாகியது.
80 பிரச்னைகளில் 75க்கு தீர்வு
குட்டிகுமார், பெருமாநல்லுார்:
ஒரு சில துறைகளில் அதிகாரிகள் யார் என்றே தெரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்கு பிரச்னை குறித்த தகவலை படத்துடன் கொண்டு சேர்க்கும் பணியை 'தினமலர்' நாளிதழ் செய்கிறது. அதிகாரிகள் - ஊழியர் - மக்களிடையே பிரச்னை தீர்க்கவும், நட்பு மேம்படவும் 'தினமலர்' நாளிதழ் உதவுகிறது. போட்டோ எடுத்து அனுப்பிய, 80க்கும் மேற்பட்ட பிரச்னைகளில், 75க்கும் அதிமானவற்றுக்குத் தீர்வு கிடைத்துள்ளது.
நீண்ட கால பிரச்னைகள் மாயம்
மனோகரன், அண்ணா காலனி:
எங்கு சென்றாலும், கண்ணுக்கு தென்படும் அனைத்து புகார்களையும் 'தினமலர்' நாளிதழுக்கு உடனடியாக பகிர்ந்து விடுவேன். அவற்றை சரிசெய்த பின்பும் தவறாமல் படம் எடுத்து அனுப்புகிறேன். 'தினமலர்' நாளிதழ் மூலம், நீண்ட காலம் தீர்க்கப்படாத பல பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
'தினமலர்' நாளிதழால் மிகுந்த பயன்
கந்தசாமி, டிமாண்ட் வீதி:
'தின மலர்' நாளிதழுக்கும், எங்களுக்குமான தொடர்பு எளிதாகியுள்ளது. செய்திகளை அனுப்பி வைக்கும் போது, செய்திகளும் வெளியாகிறது. புகார்களுக்கும் தீர்வு கிடைக்கிறது. 'தினமலர்' நாளிதழ் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
வாசகர் ஆர்வம் பெருகுகிறது
சுதா, பெருந்தொழுவு.
தினமலர் 'வாட்ஸ்அப்' எண் பதிவு செய்தால், செய்தி நிச்சயமாக படத்துடன் வெளியிடப்படுகிறது. உடனடியாக அதிகாரிகள் பார்வைக்கு செல்கிறது. சமூக பொறுப்பில் உள்ளவர்களுக்கு, சத்தமில்லாமல் அடையாளம் தரும் நாளிதழாக 'தினமலர்' நாளிதழ் உள்ளது. 'தினமலர்' நாளிதழ் வாங்கி பார்க்கும் போது, நாம் எடுத்து அனுப்பிய போட்டோ, பிரசுரமாகியிருக்கும். மறுபடியும் பொது பிரச்னையை பார்த்தால் எடுத்து அனுப்ப ஆர்வம் பெருகும்; ஊக்கமாக இருக்கும்.