
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி, கங்கவார் வீதியில் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவிலில் ஆடிப்பூர பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தீர்த்தக்குடம் ஊர்வலம் நடந்தது.
முன்னதாக, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, குடங்களில் தீர்த்தம் எடுத்து ரத வீதிகள் வழியாக, ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். சிறப்பு அபிேஷகம், பூஜைகளுக்கு பின், பெண்களுக்கு தாலிச்சரடு, வளையல், மஞ்சள், குங்குமம் ஆகியன பிரசாதமாக வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.