/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுதந்திரம் என்ற இந்நாளே பாரத நாட்டின் பொன்னாளே!
/
சுதந்திரம் என்ற இந்நாளே பாரத நாட்டின் பொன்னாளே!
ADDED : ஆக 14, 2024 11:26 PM
n பொது n
சுதந்திர தின விழா
சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி மைதானம், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம். பங்கேற்பு: கலெக்டர் கிறிஸ்துராஜ். காலை 9:05 மணி.
l மாநகராட்சி அலுவலகம், திருப்பூர். காந்தி சிலைக்கு மாலை அணிவித்தல் - காலை 9:00 மணி. மாணவ, மாணவியர் கலைநிகழ்ச்சி - 9:15 மணி. திருப்பூர் குமரன் சிலை மற்றும் நினைவுத் துாணுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தல் - காலை 9:55 மணி.
l சுதந்திர தின விழா, மாவட்ட கோர்ட் வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை, 8:00 மணி.
l நிப்ட்-டீ காலேஜ் ஆப் நிட்வேர் பேஷன், முதலிபாளையம், திருப்பூர். காலை 8:30 மணி.
l 78வது சுதந்திர தின விழா, ஏற்றுமதியாளர் சங்க அலுவலகம், அப்பாச்சி நகர் மெயின் ரோடு, கொங்குநகர், திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் ஏற்று மதியாளர் சங்கம். காலை8:30 மணி.
l குமரன் ஏ.சி., ஹால் முதல் தளம், ரமணாஸ் ஓட்டல், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் அறம் அறக்கட்டளை. 'இன்றைக்குத் தேவையான பாரத பண்பாட்டுகூறுகள்' எனும் தலைப்பில் கலந்துரையாடல், 'இன்றைய கல்வி எவ்வாறு இருக்க வேண்டும்' எனும் தலைப்பில் சிறப்புரை - மாலை 4:00 முதல் இரவு 8:30 மணி வரை.
l மாநகராட்சி துவக்கப்பள்ளி, மாஸ்கோநகர், காலேஜ் ரோடு, திருப்பூர். 8:30 மணி.
l சுதந்திர தின விழா கொடியேற்று விழா, முத்து நகர் இரண்டாவது வீதி, திருப்பூர். ஏற்பாடு: பொது ஜன அமைப்பு. காலை 9:00 மணி.
l குமரன் மகளிர் கல்லுாரி வளாகம், மங்கலம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி.
வெள்ளி விழா
25ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம், மரக்கன்று நடும் விழா, சுதந்திர தின விழா கொண்டாட்டம், ஜிம்மி கார்டன், தபால் நிலையம் அருகில், திருப்பூர். ஏற்பாடு: வெற்றி அமைப்பு, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழு. காலை 10:00 மணி.
விழிப்புணர்வு ஊர்வலம்
சுதந்திர தினத்தை முன்னிட்டு, உடல் உறுப்பு தான விழிப்புணர்வு ஊர்வலம், காந்திநகர் காந்தி நினைவிடத்தில் இருந்து, ரயில்வே ஸ்டேஷன் குமரன் நினைவிடம் வரை, ஸ்ரீனிவாசா தியேட்டர் அருகில், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மனசு மக்கள் நல அமைப்பு.
சுதந்திர தினசிறப்பு நிகழ்ச்சி
'சிரிப்போம் சிந்திப்போம்' எனும் தலைப்பில் சுதந்திர தின சி(ரி)றப்பு நிகழ்ச்சி, ஹார்வி குமாரசாமி மண்டபம், யுனிவர்சல் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் நகைச்சுவை அரங்கம். ஈரோடு முகில் கலைக்குழு வழங்கும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி, இன்னிசை பாட்டரங்கம் - மாலை 5:30 மணி.
சிறப்பு மருத்துவ முகாம்
சுதந்திர தின விழா, இலவச காது பரிசோதனை முகாம், கீதா பார்மஸி அருகில், புஷ்பா தியேட்டர் ஸ்டாப், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மெட்ெஹல்ப். காலை 10:00 மணி.
l சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சிறப்பு மருத்துவ முகாம், அரசு மேல்நிலைப்பள்ளி, கோவில் வழி. ஏற்பாடு: ரோட்டரி திருப்பூர் ட்ரீம் சிட்டி, கருணா மெடிக்கல் சென்டர். காலை 9:00 மணி.
l ஏ.கே.ஆர்., அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி, அணைப்புதுார், அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: சிகரங்கள் அறக்கட்டளை. காலை, 9:15 முதல் மதியம், 1:30 மணி வரை.
செயற்கைஅவயம்வழங்கும் நிகழ்ச்சி
ஸ்ரீ ராஜ கணபதி கோவில் அன்னதான மண்டபம், செங்குந்தபுரம், திருப்பூர். ஏற்பாடு:சக் ஷம் அமைப்பு. காலை10:00 மணி.
கோலப்போட்டி
சுதந்திர தின விழா, பெண்களுக்கான கோலப்போட்டிராஜவிநாயகர் கோவில்அருகில், செங்குந்தபுரம், திருப்பூர். ஏற்பாடு: தம்பி நண்பர்கள் அமைப்பு, சக் ஷம்அமைப்பு. காலை 6:00 மணி.
நுால் வெளியீடு
'அடர்வனத்தில் முதல் விதை' எனும் தலைப்பில் ைஹக்கூ நுால் வெளியீட்டு விழா, திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நெருப்பெரிச்சல், திருப்பூர். திருப்பூர். ஏற்பாடு: தாய்த்தமிழ் பட்டிமன்றக்குழு. இன்றைய சூழலில் அதிகம் தேவைப்படுவது படிப்பா, பணமா எனும் தலைப்பில் பட்டிமன்றம், வாசிப்பு எனும் வழிகாட்டி எனும் தலைப்பில் கருத்தரங்கம். மதியம், 2:30 முதல், மாலை 6:30மணி வரை.
பாராட்டு விழா
'குரங்கு பெடல்' திரைப்படம் திரையிடல், திரைக்கலைஞர்களுக்கு பாராட்டு விழா, பொதிகை மஹால், காங்கயம் ரோடு, டி மார்ட் அருகில், திருப்பூர். ஏற்பாடு: பதியம் திரைப்பட இயக்கம். மாலை5:00 மணி.
ரத்ததான முகாம்
சென்ட்ரல் லயன்ஸ் கிளப் பார்மசி வளாகம், கோவை பழமுதிர் நிலையம் பின், காந்திநகர், திருப்பூர். ஏற்பாடு: முயற்சி அமைப்பு, சென்ட்ரல் லயன்ஸ் சங்கம் மற்றும் அறக்கட்டளை. காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.
n ஆன்மிகம் n
சிறப்பு கூட்டு வழிபாடு
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சிறப்பு கூட்டு வழிபாடு, காடு அனுமந்தராய சுவாமி கோவில், தாராபுரம் நகர், திருப்பூர். ஏற்பாடு: இந்து அறநிலையத்துறை. கூட்டு வழிபாடு, சமபந்தி விருந்து - மதியம் 12:00 மணி.
சீதா திருக்கல்யாண
மஹோத்சவம்
ஸ்ரீ சீதாராம விவாஹமஹோத்சவம், சுப்பையா சுவாமி திருமடம், மங்கலம் ரோடு, அவிநாசி. ஏற்பாடு: குருக்ருபா சேவா அறக்கட்டளை. உஞ்சவிருத்தி - காலை 7:00 முதல், 8:00 மணி வரை. சீர்கொண்டு வருதல், ஸ்ரீ ஸீதாராம விவாஹம், தீபாராதனை, சந்தர்ப்பனை, அன்னதானம் - காலை 8:00 முதல் மதியம், 1:00 மணி வரை. தோடயமங்கலம், குருகீர்த்தனை, பஞ்சபதி தியானம், ஆஞ்சநேயர் உற்சவம் - மாலை 3:00 முதல் இரவு 8:00மணி வரை.
பொங்கல் விழா
ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பாலவிநாயகர், ஸ்ரீ கன்னி மூல கணபதி, ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ அதிபராசக்தி, ஸ்ரீ கருப்பராயன் கோவில், தண்ணீர் பந்தல் காலனி, அனுப்பர்பாளையம், திருப்பூர். மஞ்சள் நீர் அபிேஷகம், மறுபூஜை, சிறப்பு அலங்காரம், தீபாராதனை - காலை 10:00 மணி.
l ஸ்ரீ வேட்டைக்காரசாமி, ஸ்ரீ மாசடச்சியம்மன் பத்தாம் ஆண்டு பொங்கல் விழா, கரட்டாங்காடு, தாராபுரம்ரோடு, திருப்பூர். மஞ்சள் நீராட்டு விழா பூஜை - காலை 10:30 முதல் மதியம் 12:00 மணி வரை.