/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இதல்லவோ நேர்மை...ரோட்டில் கிடந்த பணம் ஒப்படைத்த தொழிலாளி
/
இதல்லவோ நேர்மை...ரோட்டில் கிடந்த பணம் ஒப்படைத்த தொழிலாளி
இதல்லவோ நேர்மை...ரோட்டில் கிடந்த பணம் ஒப்படைத்த தொழிலாளி
இதல்லவோ நேர்மை...ரோட்டில் கிடந்த பணம் ஒப்படைத்த தொழிலாளி
ADDED : ஜூலை 06, 2024 12:00 AM

அவிநாசி;அவிநாசியில் ரோட்டோரம் கிடந்த பணத்தை, போலீசாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு பெருகி வருகிறது.
அவிநாசி, காந்திபுரம் பகுதி சங்கமாங்குளம் வீதியைச் சேர்ந்தவர் பசுவராஜ், 54. இவர் நேற்று காலை, சேவூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ரோட்டோரம், 500 ரூபாய் பணக்கட்டு ஒன்று கேட்பாராற்று கிடந்துள்ளது.
இதனைப் பார்த்த பசுவராஜ் உடனடியாக பணத்தை எடுத்து அவிநாசி போலீசாரிடம் ஒப்படைத்தார். அதில், 35 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. ரோட்டில் கிடந்த பணத்தை எடுத்து நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்த பசுவராஜை, அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார், இன்ஸ்பெக்டர் ராஜவேல் மற்றும் போலீசார் வெகுவாக பாராட்டினர். பணத்தை தவற விட்டவர்கள், அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் உரிய ஆதாரத்தை காட்டி பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என டி.எஸ்.பி., தெரிவித்தனர்.
---
.