/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு திருப்பூர் சாய ஆலைத்துறையினர் எதிர்பார்ப்பு
/
தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு திருப்பூர் சாய ஆலைத்துறையினர் எதிர்பார்ப்பு
தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு திருப்பூர் சாய ஆலைத்துறையினர் எதிர்பார்ப்பு
தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு திருப்பூர் சாய ஆலைத்துறையினர் எதிர்பார்ப்பு
ADDED : மார் 05, 2025 03:39 AM
திருப்பூர்:தமிழக அரசு, பட்ஜெட் வாயிலாக, திருப்பூர் சாயத்தொழில் பாதுகாப்புக்கான அறிவிப்புகளை வெளியிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் பகுதிகளில், 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உட்பட்ட, 300 சாய ஆலைகளும், 60 தனியார் சுத்திகரிப்பு சாய ஆலைகளும் இயங்கி வருகின்றன. இவற்றில், 90 சதவீதம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாக உள்ளன.
சாய ஆலைகளில், நவீன இயந்திரங்கள் நிறுவ, ஐந்து கோடி ரூபாய் வரை முதலீடு தேவைப்படுகிறது; தற்போது, 18 சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உட்பட்ட, 300 சாய ஆலைகள் மட்டும், 2,000 கோடி ரூபாய்க்கு அதிகமாக முதலீடு செய்துள்ளது. நேரடியாகவும், மறைமுகமாகவும், ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
சாய ஆலைகள் கடும் நெருக்கடியில் இருப்பதால், சாயத்தொழிலை பாதுகாக்க, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர சாய தொழிற்சாலைகள் தொடர்ந்து செயல்பட, உரிய உதவிகள் செய்ய வேண்டும். இயந்திரங்கள் நிறுவ, 25 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்க வேண்டும். மாவட்ட தொழில் மையங்கள் மூலம் முதலீட்டு மானியம் பெற, முதலீட்டு உச்சவரம்பை ஒரு கோடி ரூபாய் என்பதை, 10 கோடியாக உயர்த்த வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர சாய தொழிற்சாலைகளின், தொழில் அபிவிருத்தி கடனுக்கு, குறைந்தது, 3 சதவீதம் வட்டி மானியம் வழங்க வேண்டும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர சாய தொழிற்சாலைகள் மீது விதிக்கப்படும், சொத்து வரி மற்றும் தொழில் வரி குறைக்கப்பட வேண்டும். சோலார் மின் உற்பத்தி திட்டத்தை கட்டமைக்க, முதலீட்டு மானியம் வழங்க வேண்டுமென, சாய ஆலைகள் வலியுறுத்தி வருகின்றன.