/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட விழா கொடையாளர்களுக்கு பாராட்டு
/
'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட விழா கொடையாளர்களுக்கு பாராட்டு
'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட விழா கொடையாளர்களுக்கு பாராட்டு
'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட விழா கொடையாளர்களுக்கு பாராட்டு
ADDED : மார் 03, 2025 04:59 AM

திருப்பூர் : 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட, 10ம் ஆண்டு விழாவில், கொடையாளர், தன்னார்வலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின், 10வது ஆண்டு விழா மற்றும் 11ம் ஆண்டுக்கான நாற்று பண்ணை துவக்கவிழா, நேற்று முன்தினம் ஐ.கே.எப்., வளாகத்தில் நடந்தது. இப்பணிகளில் கரம் கோர்த்து செயல்படும், கொடையாளர்கள், தன்னார் வலர்கள், களப்ப ணியாளர்கள் என, நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.
'தினமலர்' நாளிதழ் இணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, 'வீ த லீடர்ஸ் பவுண்டேஷன்' முதன்மை சேவகர் அண்ணாமலை, 'ராயல் கிளாசிக்' நிறுவன தலைவர் கோபால கிருஷ்ணன் ஆகியோர், விருது மற்றும் நினைவு பரிசு வழங்கினர்.
தி சென்னை சில்க்ஸ் குழுமம் மற்றும் 'டீமேஜ் பிரிகாஸ்ட்' நிறுவன இயக்குனர் கார்த்திகேயன், எஸ்.ஆர்.ஜி., அப்பேரல்ஸ் கோவிந்தராஜ், 'சுலோச்சனா காட்டன்' நிர்வாக இயக்குனர் கிருஷ்ணகுமார், 'ராம்ராஜ் காட்டன்' நிறுவனர் நாகராஜன், 'எவரெடி' குழும தலைவர் சுப்பிரமணியம், ரெப்போ வங்கி மற்றும் மஹிந்திரா வாட்டர்ஸ்' நிறுவன பிரதிநிதிகள், நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.