/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம்: 11ம் ஆண்டு துவக்க விழா
/
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம்: 11ம் ஆண்டு துவக்க விழா
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம்: 11ம் ஆண்டு துவக்க விழா
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம்: 11ம் ஆண்டு துவக்க விழா
ADDED : பிப் 27, 2025 11:26 PM

திருப்பூர்: 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின், 11ம் ஆண்டு துவக்க விழா நாளை நடக்கிறது.
இதுகுறித்து 'வெற்றி' அமைப்பின் நிறுவனர் சிவராம், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட இயக்குனர் குமார் துரைசாமி ஆகியோர் கூறியதாவது:
'வெற்றி' அமைப்பு துவங்கி, 25 ஆண்டுகளாகிறது. இதன் வாயிலாக, ஆண்டிபாளையம் குளம் துார்வாரி மேம்படுத்தப்பட்டதால், தொடர்ந்து நீர் நிரம்பி காட்சியளிக்கிறது. இடுவம்பாளையம் அரசு பள்ளியில், 24 வகுப்பறைகள் கட்டி தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவாக, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் வகையில் துவங்கப்பட்டது.
பல்வேறு தரப்பினர் வேண்டுகோளை ஏற்று, தொடர்ந்து 10 ஆண்டுகளாக சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறோம்.தற்போது, 10 ஆண்டுகள் நிறைவில், 22 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இதில், 90 சதவீத மரங்கள் நன்கு வளர்ந்து பலன் அளித்து வருகின்றன. விவசாயிகள், வேளாண்துறையினர், வனத்துறையினர், தொழில்துறையினர் பங்களிப்பு இதில் உள்ளது. மரங்கள் நட்டு பசுமையும், இயற்கை சூழலும் பாதுகாக்கப்படுகிறது.
நாட்டு வகை மரங்கள்; அரிய வகை மூங்கில்கள், சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள மரங்கள் நடப்பட்டுள்ளன. மாநகராட்சியில் ரிசர்வ் சைட்டுகளில் மரங்கள் நடப்பட்டுள்ளன. இயற்கை வேளாண்மைக்கான பயிற்சியளிக்கப்பட்டு, 200க்கும் மேற்பட்டோர் அதைப் பின்பற்றி வருகின்றனர்.
இதன், 11வது ஆண்டு துவக்கம் மற்றும் புதிய நர்சரி துவக்க விழா ஆகியன, நாளை (மார்ச் 1ம் தேதி), பழங்கரையிலுள்ள ஐ.கே.எப்.., வளாகத்தில் நடைபெறவுள்ளது.
'வீ தி லீடர்ஸ் பவுண்டேசன்' முதன்மை சேவகர் அண்ணாமலை குப்புசாமி, 'தினமலர்' நாளிதழ் இணை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். சிறப்பு நிகழ்ச்சியாக ராஜா, பாரதி பாஸ்கர் ஆகியோரது பட்டிமன்றம் நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
''வனத்துக்குள் திருப்பூர் திட்டம் மூலம், தற்போது, 10 ஆண்டுகள் நிறைவில், 22 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில், 90 சதவீத மரங்கள் நன்கு வளர்ந்து பலன் அளித்து வருகின்றன''

