sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வெந்து தணியாத திருப்பூர்! 5ம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும்...

/

வெந்து தணியாத திருப்பூர்! 5ம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும்...

வெந்து தணியாத திருப்பூர்! 5ம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும்...

வெந்து தணியாத திருப்பூர்! 5ம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும்...


ADDED : மே 02, 2024 07:14 AM

Google News

ADDED : மே 02, 2024 07:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'திருப்பூர் மாவட்டத்தில் இந்த வாரமும் வெயில் அதிகளவில் இருக்கும்' என, வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

கோடை வெயிலின் உக்கிரம் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நிலையில், மாநிலத்தின் பல மாவட்டங்களில், வரலாறு காணாத வெயில் நிலவுகிறது. 'குளு, குளு' காலநிலை நிலவும் ஊட்டியில், 73 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வெப்பநிலை அதிகரித்திருக்கிறது என்ற தகவல் வெளியானது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம், கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வாராந்திர வானிலை அறிக்கையில், ''திருப்பூர் மாவட்டத்தில், வரும், 5ம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை, 41 முதல், 43 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். (அதாவது, 105.8 டிகிரி பாரன்ஹீட் முதல், 109.4 டிகிரி பாரன்ஹீட்) என, கூறப்பட்டுள்ளது. கடந்த வாரமும், இதே அளவு வெப்பநிலை தான் நிலவியது.

திருப்பூரில், குறைந்தபட்ச வெப்பநிலை, 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 60 முதல், 70 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 20 முதல், 30 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது என, கூறப்பட்டுள்ளது. 'மணிக்கு, 12 முதல், 18 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்' எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மதிய நேரங்களில், 12:00 மணி முதல், 3:00 மணிவரை அதிக வெயில் எதிர்பார்க்கப்படுவதால், இயன்றவரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். கால்நடைகளை மாலை, 4:00 மணிக்கு மேல் மேய்ச்சலுக்கு விடுவது நல்லது.

இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வரும், 5ம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை, 41 முதல், 43 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். (அதாவது, 105.8 டிகிரி பாரன்ஹீட் முதல், 109.4 டிகிரி பாரன்ஹீட்) என, கூறப்பட்டுள்ளது

டாக்டர் படம் வைக்கவும்

--------------------வெக்கை வாதம் வரும்வேண்டாமே மெத்தனம்!திருப்பூர் டாக்டர் முருகநாதன் கூறியதாவது:உலகளவில், அளவுக்கதிகமான வெயில் என்பது, பேசு பொருளாக மாறியிருக்கிறது. பல நாடுகளின் விஞ்ஞானிகள், இந்த வெப்பத்தால் ஏற்படும் வெப்ப வாதம் குறித்து விவாதிக்க துவங்கியுள்ளனர். கோடையில், அளவுக்கதிகமாக உடற்பயிற்சி செய்வது, தவிர்க்கப்பட வேண்டும். வெக்கை வாதம் என்பது, முதிர்ந்த வயதினர் மற்றும் இளம் குழந்தைகளை அதிகளவில் பாதிக்க செய்யும்.நாள்பட்ட வியாதி உள்ளவர்கள், பக்கவாதம், மறதி நோய், இதய பலவீனம், மனநோயாளிகள் மற்றும் நுறையீரல் பாதிக்கப்பட்டவர்கள், எளிதில் வெப்ப வாதத்தால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது; எனவே, இவர்கள் அதீத வெயில் சமயத்தில் வெளியில் செல்லாமல் தவிர்ப்பது நல்லது. காரில் குழந்தைகளை அமர்த்தி வைத்து விட்டுனா பெற்றோர் கடைக்கு சென்று வருவர்; இது தவறு. காருக்குள் வெப்ப அனல் பரவி, குழந்தைகள் பாதிக்கப்படுவர்.வெப்ப வாதம் ஏற்பட்டால், மிக அசதி, சோர்வு, மயக்கம், மனக்குழப்பம், தடுமாற்றம், நினைவு இழத்தல், வலிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்படலாம். குறைந்த ரத்த அழுத்தம், நுரையீரல் பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு, தசை செயலிழப்பு, கணையம், கல்லீரல் செயலிழப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.வெப்பவாதம் அறிகுறி தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற வேண்டும்; உடலை குளிர்ச்சிப்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us