/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று குரூப் - 2 தேர்வு; பள்ளிகளுக்கு விடுமுறை
/
இன்று குரூப் - 2 தேர்வு; பள்ளிகளுக்கு விடுமுறை
ADDED : செப் 13, 2024 11:57 PM
திருப்பூர் : டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வு நடத்தப்படுவதால், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில் பள்ளி திறப்பு தாமதத்தால், சனிக்கிழமைகளில் அரசு பள்ளிகள் செயல்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஜூன் மாதத்தில் ஒரு நாளும், ஜூலையில் ஒரு சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக இருந்தது. ஆசிரியர் சங்கங்களின் தொடர் வலியுறுத்தலால், ஆக., மாத சனிக்கிழமைகளில் பள்ளி விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், பள்ளி கல்வித்துறையின் நாட்குறிப்பேடு அட்டவணைப்படி, இன்று (14ம் தேதி) பள்ளிகள் செயல்படுமென குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், டி.எஸ்.பி.எஸ்.சி., குரூப் - 2 தேர்வு இன்று நடக்கிறது.
அதற்காக, பள்ளிகள் தேர்வு மையங்களாக மாற்றப்பட்டு, இன்று பள்ளிகள் விடுமுறை என மாவட்ட கல்வித்துறை தரப்பில் தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று காலை அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதே நேரம், காலாண்டு / முதல் பருவத் தேர்வு துவங்குவதால், வரும், 21 ம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படும்; தேர்வு முடிந்து விடுவதால், வரும், 28ம் தேதி (சனிக்கிழமை முதல்) காலாண்டு விடுமுறை துவங்குமென, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.