/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இன்று நபிகள் புகழ் பாடும் பேரணி
/
இன்று நபிகள் புகழ் பாடும் பேரணி
ADDED : செப் 17, 2024 05:05 AM
திருப்பூர்: மிலாடி நபியை முன்னிட்டு, திருப்பூர் மீலாது கமிட்டி சார்பில் 12 வது ஆண்டு, நபிகள் புகழ் பாடும் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நபிகள் நாயகத்தின் பிறந்த நாள், மிலாடி நபி விழாவாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெறும்.
திருப்பூர் மீலாது கமிட்டி நிர்வாகிகள் கூறியதாவது:
திருப்பூரில் 12வது ஆண்டாக நபிகள் புகழ் பாடும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நபிகள் நாயகத்தின் புகழ் மற்றும் வரலாற்றை வெளிப்படுத்தும் விதமாக, இஸ்லாமியர்கள் தீன் கொடியேந்தி, ஊர்வலமாகச் சென்று, இனிப்புகள் வழங்கியும், மார்க்க சொற்பொழிவில் பங்கேற்பர்.
17-ம் தேதி(இன்று) காலை, 9:00 மணிக்கு பெரிய பள்ளிவாசல் முன் புறப்படும் இந்த ஊர்வலம் நகரின் பல்வேறு முக்கிய பகுதிகள் வழியாக நடைபெறும்.
மேலும் இதில் பங்கேற்க வருவோரில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு நடப்பாண்டு உம்ரா பயணம் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். மேலும் மூன்று பேருக்கு தலா, 3,313 ரூபாய் நிதியும், மதரசா பள்ளி மாணவர்கள் 50 பேர் ேதர்வு செய்து, தலா 1,500 ரூபாய் நிதியும் வழங்கப்படும்.
ஏற்பாடுகளை திருப்பூர் மீலாது கமிட்டி மற்றும் வட்டார ஜமாத்துல் உலமா சபை ஆகியன செய்துள்ளன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.