ஆன்மிகம்
சிறப்பு பூஜை
பொங்கல் விழா
ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ புற்றுமாகாளியம்மன், ஸ்ரீ அர்ஷவதன நாராயண பெருமாள், ஸ்ரீ கருப்பராயன், ஸ்ரீ கன்னிமார் கோவில், காசிக்கவுண்டன் புதுார், வேலாயுதம்பாளையம், அவிநாசி. ஸ்ரீ பிரம்ம சித்தி விநாயகர் கோவிலில் இருந்து கரகம் எடுத்து வருதல் - மாலை 6:00 மணி. ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் இருந்து படைக்கலம் எடுத்து வருதல் - இரவு 11:00 மணி.
l பட்டத்தரசியம்மன் கோவில், வேலாயுதம்பாளையம், சாமளாபுரம், பல்லடம். சிறப்பு பூஜை - காலை 9:00 மணி. சிறப்பு அலங்காரம், கம்பம் சுற்றி ஆடுதல் - இரவு 7:00 மணி.
l ஸ்ரீ காட்டுமாரியம்மன் கோவில், ராயம்பாளையம், அவிநாசி. அபிேஷக பூஜை - இரவு 7:30 மணி. பெண்கள் கும்மியாட்டம் - இரவு 8:00 மணி. சாட்டு சிறப்பு பூஜை - இரவு 9:00 மணி.
தேர்த்திருவிழா
திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டி, அவிநாசி. திருக்கல்யாணம், யானை வாகன, அன்ன வாகனக் காட்சி - மாலை 5:00 மணி. கொங்கு மருத்துவர் நல அறக்கட்டளை, 16ம் ஆண்டு தேர்த்திருவிழா கலை நிகழ்ச்சி - இரவு 7:00 மணி.
குண்டம் திருவிழா
ஸ்ரீ கொண்டத்துக்காளியம்மன் கோவில், பெருமா நல்லுார். குண்டம் திரு விழாவுக்கு, சகுனம் கேட்டல் - காலை 10:00 மணி.
பிரதோஷ சிறப்பு பூஜை
ஆவுடைய நாயகி அம்மன் உடனமர் ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். விசேஷ அபிேஷக பூஜை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை - மாலை 4:00 மணி. சுவாமி திருவீதி உலா - மாலை 5:30 மணி. அன்னதானம் - மாலை 6:00 மணி.
n பொது n
சிறப்பு விற்பனை
89ம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகை விற்பனை திருவிழா, ஏ. நடராஜ் செட்டியார் சன்ஸ் ஜூவல்லர்ஸ், யுனிவர்சல் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
மனவளக்கலை யோகா
எம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்குநகர் கிழக்கு, திருப்பூர். காலை மற்றும் மாலை 5:00 முதல், 7:30 மணி வரை.