/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேலம்பட்டியில் சுங்கச்சாவடி; ரத்து செய்ய வலியுறுத்தல்
/
வேலம்பட்டியில் சுங்கச்சாவடி; ரத்து செய்ய வலியுறுத்தல்
வேலம்பட்டியில் சுங்கச்சாவடி; ரத்து செய்ய வலியுறுத்தல்
வேலம்பட்டியில் சுங்கச்சாவடி; ரத்து செய்ய வலியுறுத்தல்
ADDED : மார் 29, 2024 12:49 AM
அவிநாசி;அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரையிலான (என்.எச்., 381) சுங்கச் சாலை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, திருமுருகன்பூண்டியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சட்ட விழிப்புணர்வு அணி மாநில செயலாளர் சதீஷ் குமார் தலைமை வகித்தார். விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, களஞ்சியம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், வாகன பேரணி, கடை அடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம் என நடைபெற இருந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அவிநாசி முதல் அவிநாசி பாளையம் வரையிலான சுங்க சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில், ஐகோர்ட்டில் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பூர் மாவட்ட பகுதியில் மூன்று லோக்சபா எல்லைக்குள் உள்ள திருப்பூர், நீலகிரி, கோவை ஆகியவற்றில் தேர்தலில் நிற்கும் அனைத்து வேட்பாளர்களிடம் என்.எச்:381 சாலை திட்டத்தை ரத்து செய்ய கோருவது தொடர்பாக தேர்தல் பரப்புரையில் சேர்க்கவும் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் நடவடிக்கை எடுப்பது என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கொங்கு வர்த்தக கூட்டமைப்பு சார்பில் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன் நன்றி கூறினார்.

