/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விலை சரிவால் ரோட்டில் வீசப்படும் தக்காளி; விவசாயிகள் பாதிப்பு
/
விலை சரிவால் ரோட்டில் வீசப்படும் தக்காளி; விவசாயிகள் பாதிப்பு
விலை சரிவால் ரோட்டில் வீசப்படும் தக்காளி; விவசாயிகள் பாதிப்பு
விலை சரிவால் ரோட்டில் வீசப்படும் தக்காளி; விவசாயிகள் பாதிப்பு
ADDED : செப் 13, 2024 10:31 PM

உடுமலை : தக்காளி சாகுபடியில் நோய்த்தாக்குதல், வெயில் தாக்கம் அதிகரிப்பு, விலை சரிவு காரணமாக, தக்காளியை ரோட்டில் வீசும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, உடுமலை பகுதிகளில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. இப்பகுதிகளில், ஏறத்தாழ, 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அறுவடை தீவிரமடைந்துள்ளது.
விளையும் காய்கறிகளை, உடுமலை நகராட்சி சந்தை மற்றும் சுற்றுப்புறங்களிலுள்ள தனியார் ஏல மையங்கள் வாயிலாக, விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக தக்காளி விலை சரிந்து, 14 கிலோ கொண்ட, பெட்டி, 150 ரூபாய் வரை மட்டுமே விற்று வந்தது. ஓணம் பண்டிகை துவங்கியுள்ளதால், தக்காளி விலை சிறிது உயர்ந்து, நேற்று ஒரு பெட்டி, ரூ.250 வரை விற்றது.
தக்காளி விலை சரிவு காரணமாக, விவசாயிகள் பாதித்து வந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், காய் பாதித்துள்ளதோடு, ஒரு சில பகுதிகளில் வைரஸ் நோய் தாக்குதலும் ஏற்பட்டுள்ளதால், பழங்கள் பாதித்து, ரோட்டில் வீசும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: தக்காளி சாகுபடிக்கு, உழவு, உரம், மருந்து, பறிப்பு கூலி என சாகுபடி செலவினம் அதிகரித்துள்ள நிலையில், விலை சரிவு காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நோய்த்தாக்குதல் மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து, செடிகளும், மரங்களும் பாதித்துள்ளது. இதனால், நடப்பு சீசனில் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு, தமிழக அரசு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.