/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இழுத்துச் செல்லப்படும் இரு சக்கர வாகனங்கள் ஆமை வேக ரோடு பணியால் காத்திருக்கும் அபாயம்

ADDED : ஜூலை 04, 2024 05:28 AM

பல்லடம்: பல்லடம் - மங்கலம் ரோடு, வஞ்சிபாளையம் வழியாக அவிநாசி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகிறது. இந்த ரோட்டில், சரக்கு போக்குவரத்து மிக அதிக அளவில் நடந்து வருகிறது.
வாகன போக்குவரத்து நிறைந்த இந்த ரோடு, பூமலூர் பிரிவு முதல் வேலம்பாளையம் வரை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
இதற்காக, வேலம்பாளையம் பகுதியில் உள்ள ரோடு இயந்திரங்கள் உதவியுடன் கீரப்பட்டுள்ளது. கீரல் விழுந்த இந்த ரோடு வழியாக செல்லும் வாகனங்கள் தடுமாறி வருகின்றன. குறிப்பாக, ரோட்டில் உள்ள கீரல்களால், இருசக்கர வாகனங்கள் ரோட்டின் போக்கில் இழுத்துச் செல்லப்படுகின்றன.
அதிகப்படியான டிப்பர் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள், கன்டெய்னர்கள் இந்த ரோட்டில் சென்று வரும் நிலையில், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
இரு சக்கர வாகன ஓட்டிகள் சிலர் கூறியதாவது:
பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் என, பலரும் இந்த ரோட்டை பயன்படுத்தி வருகின்றனர். புதிய ரோடு அமைக்க 'மில்லிங்' செய்யப்பட்டுள்ளதால், இருசக்கர வாகனங்கள் கட்டுப்பாட்டை இழக்கின்றன. மூன்று மாதங்களுக்கு மேலாக ரோடு போடும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. விபத்து அபாயம் உள்ளதால், ரோடு பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.