ADDED : மார் 25, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவையில் இருந்து தினசரி காலை, 8:00 மணிக்கு நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (எண்:16322) புறப்படுகிறது. இரவு, 8:00 மணிக்கு நாகர்கோவில் சென்று சேர்கிறது.
கன்னியாகுமரி, ஆரல்வாய் மொழி - நாகர்கோவில் இடையே பொறியியல் மேம்பாட்டு பணி நடப்பதால், வரும், 27ம் தேதி வரை இந்த ரயில் இயக்கம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு வழியாக திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு பகலில் இந்த ஒரு ரயில் மட்டுமே உள்ளது. அடுத்த ரயில், இரவு, 8:10க்கு தான். இந்த ரயில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தின் பெரும்பாலான ஸ்டேஷன்களில் நின்று செல்வதால், மூன்று மாவட்டங்கள் இடையே தினசரி பயணிப்பவர் அதிகம்.
நான்கு நாட்களுக்கு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

