/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடை உற்பத்தி தொழில் ஆடிட்டர்களுக்கு பயிற்சி
/
ஆடை உற்பத்தி தொழில் ஆடிட்டர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 06, 2024 08:54 PM
திருப்பூர்;இந்தியளவில் ஆயத்த ஆடை, மேக் அப்ஸ், வீட்டு அலங்காரப் பொருட்கள் ஆகியவை வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டின் கீழ் உற்பத்தி செய்யப்படுவதை ஆவணப்படுத்தி உறுதி செய்து சான்றளிக்க வேண்டிய தேவையை கருத்தில் கொண்டு, திறன் மேம்பாட்டு கழகத்தின் வாயிலாக, பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இக்கழத்தின் வாயிலாக சுவிட்சர்லாந்து நாட்டின், 'புளுசைன் டெக்னாலஜி' என்ற நிறுவனம், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்றுமதி நிறுவனங்களுடன் ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய ஜவுளி தொழிலில் நிலவும் பிரச்னைகளுக்கும் காணும் யோசனைகளை 'புளுசைன்' நிறுவனம் வழங்கி வருகிறது.
அந்நிறுவனம், இந்திய சந்தைகளை மையப்படுத்தி, 'இம்பாக்ட்' என்ற பெயரில் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, திருப்பூர் எஸ்.ஜி.எஸ்., அலுவலகத்தில், தங்கள் ஆடிட்டர்களுக்கான பயிற்சியை, அந்நிறுவனம் வழங்கியது.
நிறுவன ஆடிட்டர் சோன்ஜா போனிஷ், தலைமை வகித்தார். திருப்பூர் எஸ்.ஜி.எஸ்., இந்தியா சாப்ட்லைன் நிறுவன மண்டல ஆய்வக மேலாளர் பாலமுருகன் ராமசாமி மற்றும் வணிக மேம்பாட்டு மேலாளர் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
'நிப்ட்-டீ' ஆலோசகர் பெரியசாமி பேசுகையில், திருப்பூரில் உள்ள ஆடை உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விளக்கினார். மறு சுழற்சி, கழிவு மேலாண்மை, எம்ப்ராய்டரி தொழில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் அதற்கான தீர்வுகள் குறித்து பேசினார். திருப்பூரில் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த 'இம்பாக்ட்' சேவை உதவும்' என்றார்.