/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்டம் முழுவதும் 18 எஸ்.ஐ.,கள் இடமாற்றம்
/
மாவட்டம் முழுவதும் 18 எஸ்.ஐ.,கள் இடமாற்றம்
ADDED : ஜூலை 02, 2024 01:35 AM
திருப்பூர்;திருப்பூர் மாவட்ட போலீஸ் அவிநாசி, காங்கயம், பல்லடம், தாராபுரம், உடுமலை ஆகிய, ஐந்து சப்-டிவிஷன்களை உள்ளடக்கியது. இதில், பணியாற்றி வந்த, 18 எஸ்.ஐ.,களை பல்வேறு ஸ்டேஷன்களுக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி., அபிஷேக் குப்தா உத்தரவிட்டுள்ளார்.
அவிநாசி அமல் ஆரோக்கியதாஸ் பெருமாநல்லுாருக்கும், அங்கிருந்த பாரதிராஜா அவிநாசிக்கும்; சேவூர் சேகர் அலங்கியத்துக்கும், காமநாயக்கன்பாளையம் சுமதி பெருமாநல்லுாருக்கும், பல்லடம் ஜீவானந்தம் காமநாயக்கன் பாளையத்துக்கும், பல்லடம் அன்புராஜ் பல்லடம் குற்றப்பிரிவுக்கும், மங்கலம் உமாமகேஸ்வரி உடுமலைக்கும், அங்கிருந்த சம்பத்குமார் மாவட்ட குற்றப்பிரிவுக்கும், கொமரலிங்கம் கோவிந்தராஜன் பல்லடத்துக்கும், தாராபுரம் முத்துக்குமார் வெள்ளகோவிலுக்கும், அலங்கியம் துரைசாமி சேவூருக்கும், குண்டடம் பழனிசாமி பெருமாநல்லுாருக்கும், மூலனுார் சண்முகம் குண்டடத்துக்கும், காங்கயம் கார்த்திக்குமார்ஊத்துக்குளிக்கும், ஊத்துக்குளி பாலமுருகன் காங்கயத்துக்கும், கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஜயகுமார் கொமரலிங்கத்துக்கும், தாராபுரம் அனைத்து மகளிர் பத்மபிரியா குண்டடத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.