ADDED : ஜூலை 25, 2024 11:11 PM
திருப்பூர் : தமிழகம் முழுவதும் பல்வேறு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பணியாற்றும் 17 சுகாதார அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில், தற்போது திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றும் மூன்று சுகாதார அலுவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவ்வகையில், 1வது மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன், 4வது மண்டல சுகாதார அலுவலர் முருகன் ஆகியோர் கோவை மாநகராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இரண்டாவது மண்டலத்தில் பணியாற்றும் பிச்சை மதுரை மாநகராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவர்களுக்குப் பதிலாக கோவை மாநகராட்சியில் பணியாற்றும் பரமசிவம், ராதாகிருஷ்ணன்; மதுரையில் பணியாற்றும் ராஜ்கண்ணன் திருப்பூருக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சி 3வது மண்டலத்தில் சுகாதார அலுவலராகப் பணியாற்றிய ராமச்சந்திரன் கடந்த ஏப்., மாதம் ஓய்வு பெற்றார். அப்பணியிடம் காலியாக உள்ளது. இதுவரை யாரும் இங்கு நியமிக்கப்படவில்லை.

