/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போக்குவரத்து மாற்றம்; லாரிகளுக்கு சிக்கல்
/
போக்குவரத்து மாற்றம்; லாரிகளுக்கு சிக்கல்
ADDED : ஏப் 27, 2024 12:51 AM
பல்லடம்;பல்லடம் நால்ரோடு சிக்னல் அருகே, பொள்ளாச்சி ரோட்டில் உள்ள தரைமட்ட பாலம் விரிவாக்கம் செய்யும் பணி துவங்கி நடந்து வருகிறது.
இதனால், பொள்ளாச்சி மற்றும் உடுமலை ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, மாற்று வழித்தடத்தில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, பொள்ளாச்சி மற்றும் உடுமலை செல்லும் வாகனங்கள், தாராபுரம் ரோடு பிரிவிலும், பொள்ளாச்சி ரோட்டில் இருந்து திருப்பூர், கோவை செல்லும் வாகனங்கள், நால்ரோடு சிக்னலிலும், திரும்பிச் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றம், லாரி டிரைவர்களை பெரிதும் பாதிப்படையை செய்துள்ளது.
லாரி உரிமையாளர்கள் கூறுகையில், 'போக்குவரத்து மாற்றம் டூவீலர், கார் உள்ளிட்ட சிறிய வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
கன்டெய்னர்கள், சரக்கு லாரிகள், கனரக வாகனங்களுக்கு இது ஏற்புடையதல்ல. ஏற்கனவே, சரக்கு போக்கு வரத்துக்கு என, பல்லடத்தில் பிரத்யேக வழித்தடம் கிடையாது. தேசிய நெடுஞ்சாலைதான் அனைத்து வித வாகன போக்குவரத்துக்கும் பயன்பட்டு வருகிறது. தாரா புரம் ரோடு மற்றும் நால் ரோடு சிக்னலில், பெரிய அளவிலான கனரக வாகனங்கள் திரும்புவது என்பது சவாலானது.
இதனால், தேவையற்ற நேர விரயம், பொருட்செலவு ஆகியவற்றுடன், கூடுதல் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும்.
அலங்கார் தியேட்டர் அருகே உள்ள பழைய பொள்ளாச்சி பைபாஸ் ரோட்டில், அனைத்து வாகனங்களும் திரும்பிச் செல்லும் வகையில் தற்காலிக ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றனர்.

