/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜல்லிக்கற்களிடையே பயணம் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
/
ஜல்லிக்கற்களிடையே பயணம் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்
ADDED : செப் 07, 2024 11:48 PM

பல்லடம், : பல்லடம் ஒன்றியம், மல்லேகவுண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மல்லேகவுண்டம்பாளையம்- ஊத்துக்குளி செல்லும் ரோட்டில், ரோடு பணி துவங்கி நடந்து வருகிறது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன் துவங்கிய ரோடு பணி, மந்த கதியில் நடந்து வருகிறது. ஜல்லிக்கற்கள் போடப்பட்ட நிலையில், ரோடு பணி கிடப்பில் இருப்பதால், வாகன ஓட்டிகள் ஜல்லிக்கற்களுக்கு மத்தியில் சிரமத்துடன் பயணம் செய்து வருகின்றனர். இப்பகுதியில், குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவை இருப்பதால், தினசரி வாகன ஓட்டிகள் பலரும் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர். மூன்று கிலோ மீட்டர் துாரத்திற்கு, ஜல்லிக்கற்கள் மீதே வாகனங்களை ஓட்டிச் செல்வதால், தடுமாறிச் செல்வதுடன், விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது எனவே, கிடப்பில் உள்ள ரோடு பணியை விரைந்து முடித்து, சுலபமாக பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.