/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூருக்கு திருப்புமுனை! 'யார்னெக்ஸ்' கண்காட்சி இன்று நிறைவு
/
திருப்பூருக்கு திருப்புமுனை! 'யார்னெக்ஸ்' கண்காட்சி இன்று நிறைவு
திருப்பூருக்கு திருப்புமுனை! 'யார்னெக்ஸ்' கண்காட்சி இன்று நிறைவு
திருப்பூருக்கு திருப்புமுனை! 'யார்னெக்ஸ்' கண்காட்சி இன்று நிறைவு
ADDED : செப் 13, 2024 11:58 PM

திருப்பூர் : திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினரின் பேராதரவை பெற்ற, 'யார்னெக்ஸ் - டெக்ஸ் இந்தியா - டைகெம்' கண்காட்சிகள், இன்று நிறைவு பெறுகின்றன.
ஒட்டுமொத்த ஜவுளித்துறைக்கு தேவையான நுாலிழைகளை உற்பத்தி செய்வதில், நுாற்பாலைகள் முக்கிய இடத்தில் உள்ளன. பனியன் உற்பத்தியாளர்கள் பின்பற்றி சாதனை படைத்த, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி என்பதை உலகம் அறிந்து கொண்டிருக்கிறது.
நுாற்பாலைகள், பல்வேறு இடர்பாடுகளை கடந்து, இயற்கை சார் உற்பத்தியில் முன்னேறியுள்ளது, 'யார்னெக்ஸ்', டெக்ஸ் இந்தியா கண்காட்சி வாயிலாக திருப்பூருக்கு தெரிய வந்துள்ளது.
திருப்பூர் அருகே ஐ.கே.எப்., வளாகத்தில் நடந்து வரும், 'யார்னெக்ஸ்', 'டெக்ஸ் இந்தியா' மற்றும் 'டைகெம்' கண்காட்சிகள், இன்றுடன் நிறைவு பெறுகின்றன. கண்காட்சியில், ஐரோப்பிய நாடுகள் எதிர்பார்க்கும், பசுமை சார் உற்பத்தி தரத்துடன் கூடிய நுாலிழைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில், 25 மெகாவாட் சோலார் உற்பத்தி செய்யும் நுாற்பாலை, ஆண்டுக்கு எட்டு லட்சம் டன் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சும் ஆலைகள், மாதம், 3,600 டன் அளவுக்கு கிரீன் 'பைபர்'உற்பத்தி செய்யும் ஆலைகள், ஆண்டுக்கு, 163 கோடி 'பெட்' பாட்டில்களை மறுசுழற்சி முறையில் பாலியஸ்டர் நுாலாக மாற்றும் ஆலைகள், மறுசுழற்சி மூலமாக, மாதம் 30 டன் கழிவுகளை நுாலிழையாக மாற்றும் ஆலைகள், என, பசுமை சார் உற்பத்தியில் சாதனை படைக்கும் நுாற்பாலைகள் ஸ்டால் அமைத்துள்ளன.
திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள், இந்த கண்காட்சிகளை கண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர, 'யார்னெக்ஸ்' மற்றும் டெக்ஸ் இந்தியா' கண்காட்சிகள், சரியான பாதையை காட்டிக்கொண்டிருப்பதாக, மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கண்காட்சியில், பருத்தி நுாலிழைகள் மற்றும் துணிகள்; பருத்தி மற்றும் பாலியஸ்டர் கலந்த நுாலிழைகள் மற்றும் துணிகள்; வாழை நார், மூங்கில், பூக்கள், வெற்றிலை நார் உட்பட பல்வகை மூலிகை செடிகளில் இருந்து உற்பத்தியாகும் நுாலிழைகள்;
ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும், 'பெட்' பாட்டில் கழிவுகளை உருக்கி தயாரிக்கப்படும், 'பாலியஸ்டர்' நுாலிழைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆடை உற்பத்தி நுாலிழைகளுடன், எம்பிராய்டரிங் நுால்கள், புதுவகை தையல் நுால்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
திருப்பூர் பனியன் தொழில் சார்ந்த உற்பத்தியாளர்கள், முத்தான மூன்று கண்காட்சிகளை பார்வையிட இன்றே கடைசி வாய்ப்பு; தவறாமல் பார்வையிட்டு, தரமான நுால் மற்றும் துணி வரவுகளை கண்டு பயன்பெறலாம் என, கண்காட்சி அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பூர் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர, 'யார்னெக்ஸ்' மற்றும் டெக்ஸ் இந்தியா' கண்காட்சிகள், சரியான பாதையை காட்டிக்கொண்டிருப்பதாக, மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்