sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்... கண்காணிப்பில் கலக்கும் வணிகவரித்துறை

/

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்... கண்காணிப்பில் கலக்கும் வணிகவரித்துறை

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்... கண்காணிப்பில் கலக்கும் வணிகவரித்துறை

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்... கண்காணிப்பில் கலக்கும் வணிகவரித்துறை


UPDATED : மார் 22, 2024 02:22 AM

ADDED : மார் 21, 2024 11:31 AM

Google News

UPDATED : மார் 22, 2024 02:22 AM ADDED : மார் 21, 2024 11:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:லோக்சபா தேர்தலை ஒட்டி, ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக தலா மூன்று, நிலை கண்காணிப்பு படை, பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தொகுதிக்குள் வாகனத்தில் சென்று ஆய்வு செய்து, அதிகளவு பணம், மதுபானம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

திருப்பூரில் கடந்த தேர்தல் வரை, இந்த குழுக்களுக்கு தாசில்தார் அல்லது மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, உதவிக்கு போலீசார் மற்றும் வீடியோகிராபர்கள் நியமிக்கபடுவர். தற்போது வணிகவரித்துறை அலுவலர்கள் தலைமையில், இக்குழு அமைக்கப்பட்டு சோதனை செய்து வருகின்றனர்.

வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு தொகுதி எல்லை தெரிவதில்லை. உடன் செல்லும் போலீசாருக்கும், போலீஸ் எல்லை மட்டுமே தெரிகிறது.

இதனால், அடுத்த தொகுதிக்குள் சென்று, அந்த தொகுதி பறக்கும் படை வாகனத்தை பார்த்த பின், திரும்பிய சம்பவங்களும் நடந்து வருகிறது.

வாகனங்களை சோதனை செய்யும் வணிகவரித்துறை அதிகாரிகள், தேர்தல் சோதனை முடிந்த பின்பு, தங்கள் துறை சார்ந்த ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன சோதனை செய்த போது, வாகனத்தில் இருந்த நுால் பண்டலுக்கு, பத்து நாட்களுக்கு முன் போடப்பட்ட பில்லை பயன்படுத்தியதை கண்டுபிடித்து, தங்கள் துறை அதிகாரிகளை வரவழைத்து, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

இதேபோல, முறையான 'பில்' இல்லாத பல வாகனங்களுக்கு, அபராதம் விதித்துள்ளனர். தேர்தல் சோதனையோடு, சரக்குகளுக்கான ஆவணங்களையும் சரிபார்ப்பதால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.

ஆனால், அதிகாரிகளோ, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல, தேர்தல் வேலை மற்றும் வரி வசூலையும் பார்த்து விடுவது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us